சென்னை,ஏப்.30- மருத்துவம் மற் றும் மக்கள் நல்வாழ்வுத் துறை மீதான மானியக் கோரிக்கையின்போது இத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்ட அறிவிப்பு வருமாறு,
தமிழ்நாட்டில் 30 அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைகளில் மகப்பேறு மற்றும் பொது அறுவை சிகிச்சையை மேம்படுத்த நவீன உபகரணங்கள் ரூ6 கோடி மதிப்பீட்டில் வழங்கப்படும்.
தமிழ்நாட்டில் கர்ப்பக்கால உயர் ரத்த அழுத்த நோய் அதிகமுள்ள 11 மாவட்டங்களில் உள்ள அனைத்து அங்கன்வாடி மய்யங்களுக்கும் கர்ப்பிணித் தாய்மார்களின் ரத்த அழுத்தத்தை கண்டறிய நவீன ரத்த அழுத்தம் கண்டறியும் கருவி ரூ2.77 கோடி மதிப்பீட்டில் வழங்கப்படும்.
சென்னை ஸ்டான்லி, கோவை, கீழ்ப்பாக்கம், மதுரை, விழுப்புரம் மற்றும் கடலூர் ஆகிய 6 மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் எலிக்கொல்லி மருந்தினை உட்கொள்வதால் ஏற்படும் உடல் பாதிப்புகள் மற்றும் இறப்புகளை குறைக்கும் நோக்கில் அதிநவீன ரத்த சுத்திகரிப்பு உபகரணம் ரூ1.80 கோடி மதிப்பீட்டில் வழங்கப்படும்.
1,021 உதவி மருத்துவர்கள், 3,287 மருத்துவம் சார்ந்த இதர பணியிடங்கள் உள்ளிட்ட 4,308 காலிப்பணியிடங்களுக்கு தமிழ்நாடு மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட்டு நியமனம் செய்யப்படுவர். தகவல் மேலாண்மை திட்டத்தை வலுப்படுத்தும் விதமாக 17,077 சுகாதார நிலையங்களில் வை-பை இணைய சேவை ரூ46 கோடியில் ஏற்படுத்தப்படும்.
செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், மயிலாடுதுறை மற்றும் தென்காசி மாவட்டங்களில் 5 புதிய மாவட்ட மருந்து கிடங்குகள் ரூ30 கோடி மதிப்பீட்டில் தேசிய நலவாழ்வு குழும நிதியில் நிறுவப்படும்.
குழந்தைகள் மற்றும் இளம் சிசு சிகிச்சை மய்யங்கள் மஸ்கான் தரச் சான்றிதழ் பெற, 40 மய்யங்கள் தேர்வு செய்யப்பட்டு ரூ3.39 கோடி ஊக்கத் தொகை வழங்கப்
படும்.
மாநில தலைமையிட நவீன தடுப்பூசி சேமிப்பு கிடங்கின் கூடுதல் கட்டடம் செங்கல்பட்டு மாவட்டம்-நந்திவரம் ஆரம்ப சுகாதார மய்ய வளாகத்தில் ரூ66.87 லட்சம் மதிப்பீட்டில் தேசிய நலவாழ்வு குழும நிதியில் கட்டப்படும்.
30 மாவட்டங்களில் உள்ள சுமார் 6,000 கல்வி நிறுவனங்களில் “புகையிலை மற்றும் போதைப் பொருட்கள் விழிப்புணர்வு” நிகழ்ச்சிகள் ரூ2.10 கோடி மதிப்பீட்டில் நடத்தப்படும். பதிவு பெற்ற பரம்பரை மருத்துவர்களின் ஓய்வூதியம் ரூ1,000லிருந்து ரூ3,000 ஆக உயர்த்தப்படும். மூலிகைப் பயிர்கள் வளர்ப்பில் விவசாயிகள் ஈடுபடுவதை ஊக்குவிக்க பயிற்சிப் பட்டறைகள் நடத்தப்படும்.
அரசு பள்ளி மாணவர்களுக்கு மூலிகைகள், மூலிகை பயிர்கள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.
-இவ்வாறு கூறப்பட்டுள்ளது
No comments:
Post a Comment