இலங்கைக்கு 40 ஆயிரம் டன் அரிசி அனுப்பியது இந்தியா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, April 4, 2022

இலங்கைக்கு 40 ஆயிரம் டன் அரிசி அனுப்பியது இந்தியா

கொழும்பு, ஏப். 4- இலங்கையின் உணவுத் தட்டுப்பாட்டை போக்க அந்த நாட்டுக்கு இந்தியா சார்பில் 3 லட்சம் டன் அரிசி அனுப்பப்பட உள்ளது. இதில் முதல் கட்டமாக 40 ஆயிரம் டன் அரிசி அனுப்பப் படுகிறது.

தென்னிந்திய துறைமுகங்களில் இருந்து இலங்கைக்கு சரக்கு கப் பல்கள் மூலம் அரிசி அனுப்பும் நடவடிக்கை தொடங்கப்பட்டு இருக்கிறது. அடுத்த சில நாட்களில் சரக்குக் கப்பல்கள் இலங்கையை சென்றடையும் என்று எதிர்பார்க் கப்படுகிறது. இந்தியா சார்பில் சரக்கு கப்பலில் அனுப்பி வைக்கப் பட்ட 40 ஆயிரம் டன் டீசல் இலங் கையை சென்றடைந்துள்ளது. இது குறித்து மும்பையை சேர்ந்த பட்டாபி அக்ரோ புட்ஸ் நிர்வாக இயக்குநர் கிருஷ்ணராவ் கூறியதாவது:-

இலங்கைக்கு இந்தியாவால் மட்டுமே உதவ முடியும். இதர நாடு களில் இருந்து கடல் மார்க்கமாக எந்தவொரு பொருளையும் இலங் கைக்கு கொண்டு செல்ல பல வாரங் கள் தேவைப்படும். இந்தியாவில் இருந்து சில நாட்களில் இலங் கைக்கு நிவாரணப் பொருட்களை அனுப்ப முடியும்.

முதல் கட்டமாக இந்தியாவில் இருந்து 40 ஆயிரம் டன் அரிசி இலங்கைக்கு அனுப்பப்பட உள்ளது. அடுத்த சில மாதங்களில் 3 லட்சம் டன் அரிசி அனுப்பி வைக்கப்படும். இதன்மூலம் இலங் கையில் உணவுத் தட்டுப்பாடு குறை யும். மேலும் அடுத்த சில வாரங் களில் இலங்கைக்கு தேவையான சர்க்கரை, கோதுமையும் அனுப்பி வைக்கப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment