ராணுவத்துக்கு அதிகம் செலவு இந்தியாவுக்கு 3ஆவது இடம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, April 27, 2022

ராணுவத்துக்கு அதிகம் செலவு இந்தியாவுக்கு 3ஆவது இடம்

ஸ்டாக்ஹோம், ஏப். 27- உலக நாடுகளின் ராணுவ செலவு குறித்த ஆய்வு அறிக் கையை ஸ்டாக்ஹோம் பன்£ட்டு அமைதி ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டு உள்ளது. அதன்படி, 2021-ஆம் ஆண்டில் உலக நாடு களின் ராணுவச் செலவு இதுவரை இல்லாத அளவில்  2.1 டிரில்லியன் டாலர்களை எட்டியது.

2021ஆம் ஆண்டில் உலகிலேயே அதிக அள வில் ராணுவத்திற்கு செலவு செய்யும் முதல் 5 நாடு களாக அமெரிக்கா, சீனா, இந்தியா, பிரிட்டன் மற் றும் ரஷ்யா ஆகியவை உள்ளன. இந்த 5 நாடு களின் ராணுவ செலவு, உலக நாடுகளின் மொத்த ராணுவ செலவில் 62 சதவீதமாக உள்ளது. 

மூன்றாவது இடத்தில் இருக்கும் இந்தியா, 2021 இல் ராணுவத்திற்காக  76.6 பில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவு செய் துள்ளது. முதலிடத்தில் இருக்கும் அமெரிக்கா 801 பில்லியன் டாலர்கள் செலவு செய்துள்ளது. சீனா 293 பில்லியன் டாலர்கள், பிரிட்டன் 68.4 பில்லியன் டாலர்கள், ரஷ்யா 65.9 பில்லியன் டாலர்கள் செலவு செய்து உள்ளன. 

கரோனா தொற்று காரணமாக ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சிக்கு மத்தியிலும், உலக ராணு வச் செலவுகள் சாதனை அளவை எட்டியிருப்ப தாக  ஸ்டாக்ஹோம் பன் னாட்டு அமைதி ஆராய்ச்சி நிறுவனத்தின் மூத்த ஆராய்ச்சியாளர் டாக்டர் டியாகோ லோப்ஸ் டா சில்வா கூறியுள்ளார். பணவீக்கம் காரணமாக  வளர்ச்சி விகிதத்தில் ஒரு மந்தநிலை இருந்தபோதிலும்,  ராணு வச் செலவு 6.1 சதவீதம் அதிகரித்துள்ளது என் றும் அவர் குறிப் பிட்டார்.

No comments:

Post a Comment