நேபாள பிரதமர் இந்தியாவில் 3 நாள் சுற்றுப்பயணம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, April 2, 2022

நேபாள பிரதமர் இந்தியாவில் 3 நாள் சுற்றுப்பயணம்

காத்மண்டு, ஏப். 2- நேபாள பிரதமர் ஷேர் பகதூர் தூபா இந்தியாவில் 3 நாள் சுற்றுப்பயணம் மேற்கொள் கிறார்.  இதன்படி அவர் ஒன்றிய வெளிவிவகார துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்திக்க இருக்கிறார்.

இதன்பின்னர் பிரதமர் நரேந் திர மோடி மற்றும் குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு ஆகியோரை சந்தித்து பேசுகிறார்.  இதுதவிர பிற நிகழ்ச்சிகளிலும் அவர் கலந்து கொள்கிறார்.  இதன் பின்பு அவர் வாரணாசி நகருக்கும் செல்கிறார். பா.ஜ.க.வின் தேசிய தலைவர் ஜே.பி. நட்டாவை சந்தித்து பேசுகிறார்.

இந்தியாவுக்கு வருகை தருவது என்பது முன்பே திட்டமிடப்பட்ட பயணம் ஆகும்.  இந்த பயணத்தில், இரு நாட்டு உறவுகள், வளர்ச்சி, வர்த்தகம், பொருளாதார ஒத்து ழைப்பு உள்ளிட்ட விசயங்கள் பற்றி ஆலோசனை மேற்கொள்ளப் படும் என கூறப்படுகிறது.

No comments:

Post a Comment