சென்னை, ஏப்.1 கிராமங்களை தேடி மருத்துவமனைகள் என்ற புதிய திட்டத்துக்காக 389 நடமாடும் மருத்துவ வாகனங் களை முதலமைச்சர்மு.க. ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிர மணியன் தெரிவித்தார்.
சென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ். வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில், கரோனா தடுப்பு பணியின்போது உயிரிழந்த முன்கள பணியாளர்களின் குடும்பத்தினருக்கு பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.25 லட்சத்தை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இழப்பீடாக வழங்கினார்.
அதைத்தொடர்ந்து புதிய நடமாடும் மருத்துவ குழு வாக னங்களை அமைச்சர் ஆய்வு செய்தார்.
இதையடுத்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தி யாளர் களிடம் கூறியதாவது:-
கிராமங்களை தேடி மருத்துவமனைகள்
தொலைதூர கிராமங்களுக் கும் மருத்துவ சேவையை கொண்டு போய் சேர்க்கின்ற வகையில் 389 நடமாடும் புதிய மருத்துவ வாகனங்களை வாங்க முடிவு எடுக்கப்பட்டு, அந்த பணிகள் முடியும் தருவாயில் உள்ளது.
அடுத்த வாரம் இந்த வாகனங்களை முதலமைச்சர் பயன்பாட்டு கொண்டு வருவார். ஒவ்வொரு வாகனத்துக்கும் ஒரு மருத்துவர், ஒரு செவிலியர், ஒரு மருத்துவம் சார்ந்த களப் பணியாளர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
ஒரு வாகனம் மூலம், ஒரு மாதத்துக்கு 40 மருத்துவ முகாம்கள் கிராமப்புறங்களில் நடத்தப்படும். அதன்படி தமிழ்நாட்டில் இருக்கிற சுமார் 80 ஆயிரம் கிராமங்களில் இந்த வாகனங்கள் மூலம் மருத்துவ முகாம்கள் நடத்தப்படும். ஏற் கெனவே மக்களை தேடி மருத்துவம் திட்டம் செயல்பட்டு வருகிறது. தற்போது கிராமங் களை தேடி மருத்துவமனைகள் என்ற வகையில் இந்த புதிய திட்டத்துக்கு முதலமைச்சர் ரூ.70 கோடி மதிப்பீட்டில் 389 வாகனங்களை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர இருக்கிறார்.
கரோனா தொற்றால் உயிரி ழந்த 129 முன்கள பணியா ளர்களுக்கு தலா ரூ.50 லட்சம் வீதம் ஒன்றிய அரசு சார்பில் ரூ.64.50 கோடி வழங்கப்பட்டுள் ளது. 39 பேருக்கு தலா ரூ.25 லட்சம் வீதம் ரூ.9.75 கோடி வழங்கப்பட்டுள்ளது.
தமிழ் நாட்டில் கரோனா தொற்று தொடர்ந்து குறைந்து வந்தா லும், உலக நாடுகளை பொறுத் தவரை அச்சநிலை இருந்து கொண்டுதான் இருக் கிறது. உலகம் முழுவதும் மீண்டும் கரோனா உச்சத்தை தொட்டு கொண்டு இருக்கிறது.
புதிய மருத்துவக்கல்லூரிகள்
அந்தவகையில், தமிழ் நாட்டில் இன்னொரு அலை உருவாகாமல் தடுப்பதற்கும், தொற்றில் இருந்து மக்களை பாதுகாத்து கொள்ளவும் தடுப்பூசி போடும் பணியை ஒரு இயக்கமாக தமிழ்நாடு அரசு செய்து வருகிறது.
இந்தநிலையில், 27ஆவது மெகா தடுப்பூசி முகாம் 50 ஆயிரம் இடங்களில் நாளை (சனிக்கிழமை) நடைபெற இருக் கிறது.
இதில் முதல் தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத 50 லட்சம் பேரும், 2ஆவது தவணை செலுத்திக்கொள்ளாத 1.30 கோடி பேரும் இந்த தடுப்பூசி முகாமை பயன்படுத்தி கொள்ள வேண்டும்.
மருத்துவத்துறையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஒன்றிய நல்வாழ்வுத் துறை அமைச்சர் மான்சுக் மாண்டேவியாவை டில்லியில் இன்று (1.4.2022) சந்திக்க இருக்கிறோம்.
அதில், முக்கியமாக பெரம்பலூர், மயி லாடுதுறை, தென்காசி, ராணிப் பேட்டை, திருப்பத்தூர், காஞ்சிபுரம் ஆகிய 6 மாவட் டங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைத்து தர வேண்டும் என ஒன்றிய அமைச்சரிடம் கோரிக்கை வைக்க இருக்கிறோம்.
ஒன்றிய அமைச்சருடன் சந்திப்பு
அதேபோல், உக்ரைனில் இருந்து தமிழ்நாடு வந்த மாண வர்களுக்கு இந்தியாவிலேயே அவர்களது மருத்துவ கல்வியை தொடர உதவுவது அல்லது போலந்து போன்ற நாடுகளில் சென்று மருத்துவம் படிக்க உதவுவது, மதுரை, கோவையில் புதிய எம்ய்ஸ் கல்லூரி அமைப் பது, நீரிழிவு நோய்க்கு தமிழ் நாட்டில் பட்டப்படிப்பு படிப் பதற்கு அங்கீகாரம் வழங்குவது, நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிப்பதன் அவசியம் உள் ளிட்ட கோரிக்கைகளை வலியு றுத்தி ஒன்றிய அமைச்சரை சந்திக்க இருக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment