சென்னை, ஏப்.1 தமிழ்நாட்டில் நேற்றைய கரோனா பாதிப்பு குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல் வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப் பதாவது:-
தமிழ்நாட்டில் நேற்று (31.3.2022) புதிதாக 19 ஆண்கள், 16 பெண்கள் என மொத்தம் 35 பேருக்கு புதிதாக கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக சென்னையில் 17 பேர் உள்பட 9 மாவட்டங்களில் மட்டும் தொற்று பாதிப்பு பதிவாகி உள்ளது. 29 மாவட்டங்களில் யாரும் புதிதாக பாதிக்கப்பட்ட வில்லை. மேலும், 12 வயதுக்குட்பட்ட 7 குழந்தைகளுக்கும், 60 வயதுக்கு மேற்பட்ட 5 முதியவர்களுக்கு நேற்று தொற்று உறுதி செய்யப் பட்டுள்ளது. அரியலூர், தர்மபுரி, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, மயி லாடுதுறை, பெரம்பலூர், திருப் பத்தூர் உள்ளிட்ட 7 மாவட்டங்கள் கரோனாவே இல்லாத மாவட்டங் களாக உருவாகி உள்ளது.
தமிழ்நாட்டில் நேற்றையை நிலவரப்படி 61 பேர் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். தொடர்ந்து 14ஆவது நாளாக நேற்று எந்த மாவட்டத்திலும் உயிரிழப்பும் இல்லை.
கரோனா தொற்று பாதிப்பில் இருந்து 51 பேர் குணமடைந் துள்ளனர். தற்போது சிகிச்சையில் 306 பேர் உள்ளனர்.
No comments:
Post a Comment