புதுடில்லி,ஏப்.29- கரோனா வைரஸ் பரவல் குறித்து ஒன்றிய சுகாதார அமைச்சகம் நேற்று (28.4.2022) வெளியிட்ட புள்ளிவிவரம் வருமாறு,
நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 3,303 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள் ளது. ஒரே நாளில் 39 பேர் உயிரிழந்தனர். இதனால் மொத்த உயிரிழப்பு 5,23,693 ஆக உயர்ந்துள்ளது. சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை முந்தைய தினத்தைவிட 701 அதிகரித்து 16,980 ஆக உள்ளது. இது மொத்த நோயாளிகளில் 0.04 சதவீதம் ஆகும். கடந்த 24 மணி நேரத்தில் 2,563 பேர் குண மடைந்துள்ளனர்.
இது வரை 4,25,28,126 பேர் குணமடைந்துள்ளனர். குணமடைந்தோர் விகிதம் 98.74 சதவீதமாக உள்ளது. கரோனா பரிசோதனையில் தினசரி தொற்று பாதிக்கப் பட்டோர் விகிதம் 0.66 சதவீதமாகவும் வாராந்திர தொற்று பாதிக்கப்பட்டோர் விகிதம் 0.61 சதவீதமாகவும் உள்ளது. நாடு முழுவதும் இதுவரை செலுத்தப்பட்ட தடுப்பூசி டோஸ்கள் எண்ணிக்கை 188.40 கோடியை கடந்துள்ளது. கரோனா வைரஸை கண்டறிய கடந்த 24 மணி நேரத்தில் 4,97,669 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன.
-இவ்வாறு சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது.
No comments:
Post a Comment