ஆப்கானிஸ்தானுக்கு ரூ.33 ஆயிரம் கோடி நிதி திரட்ட அய்.நா. நடவடிக்கை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, April 2, 2022

ஆப்கானிஸ்தானுக்கு ரூ.33 ஆயிரம் கோடி நிதி திரட்ட அய்.நா. நடவடிக்கை

ஜெனீவா, ஏப். 2- ஆப்கானிஸ் தானில் 21 ஆண்டுகளாக நடந்து வந்த போரின் முடிவில், கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் ஆட்சி அதிகாரத்தை தலிபான் பயங்கரவாத அமைப்பி னர் கைப்பற்றினர். எந்த நேரமும் கைகளில் துப் பாக்கிகளுடன் அலையும் தலிபான்கள் ஆட்சிக்கு வந்ததைத் தொடர்ந்து பெண்களுக்கு சமத்துவ மும், சம நீதியும் மறுக்கப் படுகிறது. பெண்களுக்கு கல்விகூட மறுக்கப்படுகி றது.

சமீபத்தில் அங்கு கல்வியாண்டு தொடங்கி பள்ளிகள் திறந்தபோதும், பெண்களுக்கான பள்ளி கள் திறக்கப்படவில்லை. பள்ளிகளுக்கு சென்ற மாணவிகள் கண்ணீரு டன் வீடு திரும்பினர். தலி பான்களின் இத்தகைய போக்கால் அந்த நாட் டுக்கு உதவி செய்ய முன் வந்தவர்கள் கூட பின் வாங்கத்தொடங்கி விட் டனர். இதனால் அந்த நாட்டின் பொருளாதா ரம் கவலைக்கிடமான நிலைக்கு சென்று விட்டது.

அந்த நாட்டு மக்களின் வாழ்வாதாரம் கேள்விக் குறியாகி இருக்கிறது. அங்கு வாழ்கிற 2 கோடியே 30 லட்சம் மக்களுக்கு உணவு பாதுகாப்பு இல்லை. குழந்தைகள் கூட பட்டி னியால் தவிப்பதாக தக வல்கள் வெளிவந்தன. இது பன்னாட்டு அள வில் அதிர்வுகளை ஏற் படுத்தி உள்ளன.

இந்த நிலையில் மனி தாபிமான நெருக்கடியில் சிக்கித்தவிக்கிற அந்த நாட்டுக்கு உதவுவதற்காக அய்.நா. தொண்டு அமைப்பு 4.4 பில்லியன் டாலர் (சுமார் ரூ.33 ஆயி ரம் கோடி) நிதி திரட்டும் நடவடிக்கையில் இறங்கி உள்ளது. இந்த அமைப்பு, இங்கிலாந்து, ஜெர்மனி, கத்தார் ஆகிய நாடுகளின் ஆதரவுடன் செயல்படுகி றது. இந்த அமைப்பின் தலைவரான மார்ட்டின் கிரிபித்ஸ், இதுபற்றி ஜெனீ வாவில் செய்தியாளர்க ளிடம் கூறியதாவது:-

உக்ரைன் இன்றியமை யாத முக்கியத்துவம் வாய்ந் தது. ஆனால் ஆப்கானிஸ் தான் அர்ப்பணிப்பு மற் றும் நம்பிக்கைக்காக அழைப்பு விடுக்கிறது. நாங்கள் இப்போது அழைப்பு விடுத்துள்ள மனிதாபிமான திட்டம், உயிர்களைக் காப்பாற்று வதாகும்.

அன்றாடம் மக்கள், ஆண்கள், பெண்கள் மற் றும் குழந்தைகளின் வாழ்க் கையைத் தக்க வைக்க பொருளாதாரம் மிகவும் பலவீனமாக உள்ளது. இந்த பயங்கரமான சூழ லில் ஒரு நாட்டுக்காக இதுவரை தொடங்கப் பட்ட மிகப்பெரிய மனி தாபிமான கோரிக்கைக்கு நிதி அளிக்குமாறு நன் கொடை யாளர்களிடம் கேட்கிறோம். ஆப்கா னிஸ்தான் மக்களுக்கு இந்த மோசமான நேரத் தில் 4.4 பில்லியன் டாலர் கள் வேண்டும்.

நாளையே இந்த இலக்கை அடைய மாட் டோம் என்பதில் எங்க ளுக்கு எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் நாங் கள் அதைச் செயல்படுத்து வோம். பன்னாட்டு சமூ கம், மனிதாபிமானத்துக்கு அப்பாற்பட்டு பிரச்சி னைகளில் காலப்போக் கில் தலிபான்களுடன் இணைந்து செயல்படுவது மிகவும் முக்கியமானது என்று அவர் கூறினார்.

No comments:

Post a Comment