தோழர்களுக்கு அன்பு வேண்டுகோள்
பேரன்புடையீர், வணக்கம்
90 வயதை தொடவுள்ள நம் தலைவர்
தன் உடல்நலம், கோடை வெயிலையும் பொருட் படுத்தாமல் இளைஞர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு ஏப்ரல் 3ஆம் தேதி நாகர்கோவில் தொடங்கி ஏப்ரல் 25 சென்னை வரை 21 நாட்கள் நீட் எதிர்ப்பு, தேசியக் கல்விக் கொள்கை எதிர்ப்பு, மாநில உரிமை மீட்பு பெரும் பயணம் மேற்கொண்டுவருகிறார்
'தமிழர் தலைவர் ஆசிரியர் செல்லும் இடமெல்லாம் இளைஞர் பட்டாளத்தின் எழுச்சியை பார்த்த நம் தலைவர் நமது இளைஞர்கள் அனைவரையும் நேரில் சந்தித்து உரையாடிட விரும்புகிறார்'
அவரின் பெரும் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் 'ஏப்ரல் 30ஆம் தேதி காலை 11 மணிக்கு சென்னை பெரியார் திடலில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் தலைமையில் கழக மாநில இளைஞரணி கலந்துரையாடல் கூட்டம்' ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது
'அன்று மாலை நம் தலைவர் தலைமையில் எழும்பூர் இரயில் நிலையத்தில் ஹிந்தி எதிர்ப்புப் போராட்டம் நடைபெறவுள்ளது'
கழக இளைஞரணி மாநில, மண்டல மாவட்ட, ஒன்றிய, நகர, கிளை கழக பொறுப்பாளர்கள் மற்றும் தோழர்கள் அனைவரும் பெருந் திரளாக பங்கேற்று சிறப்பிக்க வேண்டுகிறோம்
'நமது தலைவர் தலைமையில் காலையில் கலந் துரையாடல், மாலையில் ஹிந்தி எதிர்ப்புப் போராட்டம் அரிய வாய்ப்பு இளைஞர்களே தவறவிடலாமா? ஏப்ரல் 30ஆம் தேதி சென்னை பெரியார் திடல் கழக இளை ஞர்களின் கருங்கடலாய் காட்சி அளிக்க வேண்டும் ஒவ்வொரு பொறுப்பாளரும் புதிய இளைஞர்களோடு பங்கேற்க'
'தயாராவீர்! தயாராவீர்!'
குறிப்பு: கழக அமைப்பு செயலாளர்கள், மாநில மண்டல, மாவட்ட, ஒன்றிய,திராவிடர் கழகம், பகுத்தறி வாளர்கழகம், பகுத்தறிவு ஆசிரியரணி பொறுப்பாளர்கள் தங்கள் பகுதி 'இளைஞர்கள் பெருமளவில் பங்கேற்பதற்கு ஊக்கப்படுத்தி, இளைஞர்களுக்கு உதவிட கனிவுடன் வேண்டுகிறோம்' நன்றி
அன்புடன்
இரா.ஜெயக்குமார், பொதுச்செயலாளர்
த.சீ.இளந்திரையன், மாநில இளைஞரணி செயலாளர்
No comments:
Post a Comment