புச்சா, ஏப். 4- உக்ரைன் மீது ரஷ்ய படைகளின் தாக்குதல் தொடர்ந்து ஒரு மாதத்திற்கும் கூடுதலாக நீடித்து வருகிறது. இந்த நிலையில், இந்த வாரம் புச்சா நகரை உக்ரேனிய படைகள் மீண்டும் கைப்பற்றின. அந்நகரம் ரஷ்ய படைக ளின் கட்டுப்பாட்டில் இருந்ததால், ஏறக்குறைய ஒரு மாதமாக அந்த நக ரத்திற்கு உக்ரேனியர்கள் யாரும் செல்ல முடிய வில்லை.
இந்த சூழலில், புச்சா நகரில், 280 பேரின் உடல் களை பெரிய குழிகளில் ஒரே இடத்தில் போட்டு புதைத்து உள்ளோம் என்று மேயர் அனடோலி பெடோருக் கூறியுள்ளார்.
அவர் தொடர்ந்து கூறும்போது, புச்சா நகரில் ஒரு தெருவில் 20 ஆண்களின் உடல்கள் கிடந்தன. அவர்கள் அனை வரும் தலையின் பின்பு றத்தில் சுட்டு கொல்லப் பட்டு உள்ளனர். பலியா னவர்களில் ஆண்களும், பெண்களும் இருந்தனர். அவர்களில் 14 வயது சிறு வனும் இருந்துள்ளான் என்று பெடோருக் கூறி னார்.
கொல்லப்பட்ட வர்க ளில் சிலர் புச்சாங்கா ஆற்றை கடந்து உக்ரே னிய கட்டுப்பாட்டு பகு திக்கு செல்ல முயன்ற போது கொல்லப்பட்டு உள்ளனர் என்று அவர் கூறினார். ரஷ்ய ஆக்கி ரமிப்பின் விளைவுகளால் ஏற்பட்டவை இவை என்று அவர் வேதனையு டன் கூறினார்.
ரஷ்ய படைகளுக்கு எதிரன போரில் பொது மக்களில் எத்தனை பேர் கொல்லப்பட்டனர் என்று கூற முடியாது என் றும் அவர் கூறியுள்ளார்.
அந்த உடல்கள் இன்னும் தெருவிலேயே கிடக்கின்றன. வீரர்கள் அனுமதி கிடைத்ததும், 3 அல்லது 4 நாட்களில் உடல்களை அதிகாரிகள் அப்புறப்படுத்துவார்கள் என்று அவர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment