'நீட்' தேர்வில் தில்லுமுல்லு
மக்கள் சிந்தனைக்கு...
தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியைச் சேர்ந்த மக்களவை உறுப்பினர் பூரா நர்சையா கவுட் 'நீட்' தேர்வு தொடர்பாக 2.4.2018 அன்று அதைப்பற்றி கேள்வி எழுப்பியுள்ளார்.
1. மருத்துவ மேல்படிப்பு மாணவர் சேர்க் கைக்கான தேர்வினை நடத்தும் புரோ மெட்ரிக் எனும் அமெரிக்க நிறுவனம், தேர்வு தொடர்பான மென்பொருளை கையாடல் செய்ய முடியும் என ஒப்புக் கொண்டுள்ளதா?
2. மருத்துவ மேல்படிப்புக்கான நீட் தேர்வுக்கான மென்பொருள் கையாடல் செய்யப்பட்டதா? ஆம் எனில், விசாரணை நிலவரம் மற்றும் குற்ற வாளிகள்மீது ஒன்றிய அரசு எடுத்த நடவடிக்கை என்ன?
3. ஆம் எனில், மத்திய தேர்வுக் குழுமம் நடத்தும் தேர்வுகளை நடத்திட பொறுப்பேற்கும் நிறுவனம் அல்லது முகவர், மேலும் சிலருக்கு உள் ஒப்பந்தம் செய்ய முடியுமா?
4. ஆம் எனில், இதன் விவரங்களும், காரணங் களும் என்ன?
மேற்குறிப்பிட்ட கேள்விக்கு, ஒன்றிய மனித வளத்துறையின் இணை அமைச்சர் டாக்டர் சத்யபால் சிங் அளித்த பதில்:
1, 2: ஒன்றிய சுகாதாரம் மற்றும் நல்வாழ்வுத் துறையில் இருந்து தகவல்கள் பெறப்பட்டுள்ளன.
ஒன்றிய தேர்வு குழுமம், நீட் தேர்வு நடத்துவ தற்கான அதிகாரப்பூர்வ அமைப்பு.
இந்த அமைப்பு, ஒன்றிய சுகாதாரம் மற்றும் நல்வாழ்வுத்துறை கட்டுப்பாட்டுக்குள் உள்ளது.
2017 ஆண்டுக்கான மருத்துவ மேல்படிப்பு சேருவதற்கான 'நீட்' தேர்வை, அமெரிக்க நிறுவனமான புரோ மெட்ரிக் நிறுவனம் நடத்தியது.
இத்தேர்வில் முறைகேடுகள் நடந்ததாக ஒன்றிய தேர்வு குழுமம் கொடுத்த புகாரின் பேரில், டில்லி குற்றப்பிரிவு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளது.
இந்த புகார் தொடர்பான குற்றப் பத்திரிக்கையில், விசாரணையின்போது, அமெரிக்க நிறுவனமான புரோ மெட்ரிக் நிறுவனத்துடன் நடைபெற்ற தொலைபேசி உரையாடலில், தங்களது மென் பொருள் கையாடல் செய்யப்பட்டதை அந்த நிறுவனம் ஒப்புக் கொண்டுள்ளது.
இதன் அடிப்படையில், புதுடில்லி உயர் நீதிமன் றத்திலும், தகவல்" அறிக்கையை, குற்றப்பிரிவு காவல்துறையினர் கொடுத்துள்ளனர்.
3, 4: தேர்வை நடத்துவதற்கு, உள் ஒப்பந்தம் எதுவும் தங்களது ஒப்புதல் இல்லாமல் தருவதற்கு அனுமதி இல்லை என்று, மத்திய தேர்வுக் குழுமம் கூறியுள்ளது.
இவ்வாறு ஒன்றிய அமைச்சர் நாடாளுமன்றத்தில் 2.4.2018 அன்று பதில் அளித்துள்ளார்.
No comments:
Post a Comment