புதுடில்லி,ஏப்.2- வணிக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு உருளை விலை ரூ.268.50 அதிகரித்து ரூ.2406 ஆக உள்ளது. ரஷ்யா - உக்ரைன் நாடுகளுக்கு இடையில் நிலவும் போர் காரணமாக, பன்னாட்டு சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்தது. இதனால், நாட்டில் 137 நாள்களுக்கு பின் மார்ச் மாதம் 22-ஆம் தேதியில் இருந்து பெட்ரோல், டீசல் விலை உயர்த் தப்பட்டது. தொடர்ந்து அவற்றின் விலை உயர்ந்து வருகிறது. சென்னையில் லிட்டர் பெட்ரோல் 107.45 ரூபாய்; டீசல் 97.52 ரூபாய்க்கும் விற்பனையாகின.
பன்னாட்டு சந்தையில் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில் எரிவாயு உருளைவிலை நிர்ணயம் செய்யப்படுகிறது. ஒவ்வொரு மாதமும் 1-ஆம் தேதி எண்ணெய் நிறுவனங்கள் புதிய விலையை நிர்ணயித்து அறிவிக்கின்றன. இந்நிலையில், இந்த மாதத்திற்கான விலை நிர்ணயம் செய்யப்பட்டு 1.4.2022 அறிவிக்கப்பட்டது. இதில் வணிக ரீதியாக பயன்படுத்தப் படும் எரிவாயு உருளையின் விலை ரூ.268.50 உயர்த்தப்பட்டுள்ளது. 19 கிலோ எடையுள்ள வணிக பயன்பாடுள்ள இந்த உருளையின் விலை ரூ.2,406 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
No comments:
Post a Comment