கோயம்பேட்டில், ரூ.2.67 கோடியில் தினக்கூலி பணியாளர்கள் ஓய்வுக்கூடம் - வேளாண்மைக்கல்லூரி ஆகியவற்றை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, April 29, 2022

கோயம்பேட்டில், ரூ.2.67 கோடியில் தினக்கூலி பணியாளர்கள் ஓய்வுக்கூடம் - வேளாண்மைக்கல்லூரி ஆகியவற்றை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

சென்னை, ஏப்.29 சென்னை கோயம் பேட்டில், ரூ.2.67 கோடியில் தினக்கூலி பணியாளர்கள் ஓய்வுக்கூடம்-, சிற்றுண் டியகம் மற்றும் செங்கல்பட்டில் மறை மலை அடிகளார் சமுதாயக் கூடத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (28.4.2022) திறந்து வைத்தார். 

வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையின் கீழ் செயல்படும், சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தால் செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகரில், ரூ.5 கோடியே 85 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள மறைமலை அடிகளார் சமுதாயக்கூடம், கோயம்பேடு மொத்த விற்பனை அங் காடியில் பணியாற்றி வரும் தினக்கூலி பணியாளர்களின் பயன்பாட்டுக்காக, கோயம்பேட்டில் 5,419 சதுர அடி கட்டிட பரப்பளவில், ரூ.2 கோடியே 67 லட்சம் செலவில் கட்டப் பட்டுள்ள ஓய்வுக்கூடம் மற்றும் சிற்றுண்டியகத்தையும் முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

புதிய தோட்டக்கலை கல்லூரி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தின் கீழ் கிருஷ்ணகிரி மாவட்டம், ஜீனூரில் புதிய தோட்டக்கலைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், ஈரோடு மாவட்டம் பவானிசாகரில் புதிய மஞ்சள் ஆராய்ச்சி மய்யம், கோவை வேளாண் மைப் பல்கலைக்கழகத்தில் நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மய்யம் ஆகியவற்றை, தமிழ்நாடு முதல மைச்சர் மு.க.ஸ்டாலின், சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து நேற்று தொடங்கி வைத்தார்.

அதேபோல கரூர் மாவட்டம் கரூர், நாகை மாவட்டம் கீழ்வேளூர் மற்றும் சிவகங்கை மாவட்டம் செட்டிநாடு ஆகிய 3 இடங்களில், புதிய வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையங் களையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

மேலும், கோவையில் உள்ள தமிழ் நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில், இளம் அறிவியல் (மேதமை) வேளாண் மை மற்றும் இளம் அறிவியல் (மேதமை) தோட்டக்கலை ஆகிய பட்டப் படிப்புகளில் இந்த கல்வியாண்டு முதல் தமிழ்வழிக் கல்வி பாடத்திட்டம் மற்றும் திருச்சி மாவட்டம் குமுளூரில் உள்ள வேளாண்மை பொறியியல் கல்லூரி வளாகத்தில், வேளாண்மை பொறியியல் பட்டய படிப்பு ஆகிய படிப்புகளையும் அவர் அறிமுகப்படுத்தினார். 

இக் கல்லூரிகளில், இக்கல்வியாண்டில் தலா 50 மாணவர்களுக்கான சேர்க்கை நடைபெற்றுள்ளது.


No comments:

Post a Comment