சென்னை, ஏப்.4- தமிழ்நாட்டு மக்கள் நல்வாழ்வுத்துறை நேற்று (3.4.2022) வெளி யிட்ட அறிக்கை: தமிழ்நாட்டில் நேற்று 23 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய் யப்பட்டது. இதை யடுத்து வீட்டுத் தனிமை மற்றும் மருத்துவமனையில் 275 பேர் கரோனா சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், நேற்று சிகிச்சை பலனின்றி ஒருவர் கூட உயிரிழக்க வில்லை. இதுவரை கரோனாவுக்கு 38,025 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். மேலும் அதிக பட்சமாக நேற்று சென்னையில் 9 பேருக்கு மட்டுமே தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், 27 மாவட்டங்களில் பாதிப்பு ஏதும் இல்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Monday, April 4, 2022
தமிழ்நாட்டில் 23 பேருக்கு கரோனா பாதிப்பு
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment