21 மொழிகளில் பெரியார் என்று சொல்வது, அது பெரியாருக்காக அல்ல- தமிழ்நாட்டினுடைய பெருமையைக் காட்டுவதாகும் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, April 29, 2022

21 மொழிகளில் பெரியார் என்று சொல்வது, அது பெரியாருக்காக அல்ல- தமிழ்நாட்டினுடைய பெருமையைக் காட்டுவதாகும்

21 மொழிகளில் பெரியார் ஏன்? தொடர் 2:  தமிழர் தலைவர் ஆசிரியர் சிறப்புரை

சென்னை, ஏப்.29 21 மொழிகளில் பெரியார் என்று சொல்வது, அது பெரியாருக்காக அல்ல - தமிழ்நாட் டினுடைய பெருமையைக் காட்டுவதாகும் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள். 

21 மொழிகளில் பெரியார் - ஏன்? 

சிறப்புக் கூட்டம்

கடந்த 28.3.2022 அன்று மாலை காணொலிமூலம் ‘‘21 மொழிகளில் பெரியார் - ஏன்?’’ என்ற தலைப்பில் நடைபெற்ற சிறப்புக் கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.

அவரது சிறப்புரையின் நேற்றையத் தொடர்ச்சி வருமாறு:

நம்முடைய அமைப்பின் சார்பாக,The Periyar Self-Respect Propaganda Institution சார்பாக வெளியிட்டோம். 1979 இல் முதற்பதிப்பு. இரண்டாம் பதிப்பு 1983, 1998 இல். நான்காம் பதிப்பு  2013 இல் கடைசியாக வெளியிட்டு இருக்கிறோம்.

Socrates and Periyar 

Spinoza and Periyar 

Ruso and Periyar 

Voltaire and Periyar 

Karl Marx and Periyar

German Immanuvel Kand and Periyar

Sankara and Periyar

இதைக் கூட ஆய்வு செய்திருக்கிறார்.

ஆகவே, நண்பர்களே இப்படி ஏராளமான வாய்ப்பு கள் இருக்கின்றன.

‘‘உலக தத்துவ சிந்தனையாளர்களும் - 

தந்தை பெரியாரும் ஓர் ஒப்பியல் ஆய்வு’’

இதனைத் தமிழிலும் தரவேண்டும் என்று நம்முடைய பேராசிரியர் காளிமுத்து அவர்களை வைத்து, ‘‘உலக தத்துவ சிந்தனையாளர்களும் - தந்தை பெரியாரும் ஓர் ஒப்பியல் ஆய்வு’’ என்று, தமிழிலேயும் நூல் வெளி வந்தது; அந்த நூலை பெரியார் மணியம்மை பல்கலைக் கழகம் வெளியிட்டு இருக்கிறது.

இப்போது இதுபோன்ற ஆய்வுகள் - பல்கலைக் கழகங்களில் - திண்ணைப் பள்ளிக்கூடத்திற்கே போகாத பெரியார் என்று சொன்னேன். அந்தப் பெரியாரைப்பற்றி, பல்கலைக் கழகங்கள் ஆய்வு செய்துகொண்டிருக்கின்றன.

ஏனென்றால் ஒப்பற்ற சுய சிந்தனையாளர் அவர்.

‘‘இனிவரும் உலகம்’’ என்ற தலைப்பில் சாதாரணமாக பெரியார் அவர்கள் ஆற்றிய உரை அது.

ஒரு திருமணத்திற்கு அய்யாவும், அண்ணாவும் செல்கிறார்கள். செய்யாறு பக்கத்தில் இருக்கின்ற வாழ் குடை என்ற ஊரில் அந்தத் திருமணம் நடைபெற்றது.

1942 இல் ‘திராவிட நாடு’ பத்திரிகை தொடங்கி ஒரு சில மாதங்களே ஆகின்றன.

அந்தத் திருமணத்தில், தன்னுடைய சுய சிந்தனையை வெளிப்படுத்திட - அது மணவிழாவாக இருந்தாலும், அதனை பிரச்சார மேடையாகப் பயன்படுத்திக் கொள்வார்.  இரண்டு மணிநேரம், மூன்று மணிநேரம் தொடர்ந்து பேசுவார் தந்தை பெரியார் அவர்கள்.

அந்த மணவிழாவில் பேசிய கருத்துகளைக் கேட்டு அண்ணா அவர்கள் வியந்து போனார்.

இனிவரும் உலகம் எப்படிப்பட்டது?

எதிர்கால உலகத்தில் எப்படி வரும் என்றெல்லாம் பேசினார்.

அண்ணாவின் வியப்பும் - 

அனுமதி கேட்பும்!

அதனைக் கேட்ட அண்ணா அவர்கள்,  அதை அப்படியே எழுதி விட்டார்.

அய்யாவிடம் சொன்னார், ‘‘அய்யா உங்களு டைய உரையை எத்தனையோ இடங்களில் கேட்டிருக்கிறேன். ஆனால், இந்த உரை என்பது மிகவும் வித்தியாசமாக இருக்கிறது. இந்த உரையை ‘திராவிட நாடு’ பத்திரிகையில் வெளியிடலாம் என்று நினைக்கிறேன்; தங்களுடைய அனுமதியை கேட்கிறேன்’’ என்றார்.

‘‘அதற்கென்ன, தாரளமாக வெளியிடுங்கள்; நான் சாதாரணமாகத்தானே பேசினேன்’’ என்றார் அய்யா.

‘‘இனிவரும் உலகம்’’ 

அதுதான் ‘‘இனிவரும் உலகம்’’ நூலாக வெளிவந்தது.

இப்பொழுது நாம் வீடியோ கான்பரசிங் கூட்டம் நடத்துகின்றோமே, அதையெல்லாம் அய்யா அவர்கள் அன்றே சொல்லியிருப்பார்.

இப்படி அய்யாவினுடைய கருத்துகள் என்பது - அன்றைக்கு என்னென்ன சொன்னாரோ, அவை அத்த னையும் இன்றைக்கு நடைமுறையில் பார்க்கக்கூடிய அளவில் இருக்கிறது.

அதில் ஒன்று, குழந்தை பேற்றுக்கு, ஆண் - பெண் சேர்க்கை தேவையில்லை என்று சொன்னார்.

அதுதான் இன்றைக்கு டெஸ்ட் டியூப் பேபி.

அறிவியல் வளர்ந்து கொண்டே போகக்கூடியது.

அந்த நடைமுறை, அவருடைய காலத்திலேயே வந்துவிட்டது என்பதற்கு அடையாளமாக, இறுதியில் அவர்கள் தியாகராயர் நகரில் 1973, டிசம்பர் 19 ஆம் தேதியன்று உரையாற்றுகின்ற நேரத்தில், அதற்கு முன்பாக வேனில் சென்றுகொண்டிருந்தபொழுது அய்யாவிடம் சொல்கிறேன் - ‘‘அய்யா, பரிசோதனைக் குழாய் குழந்தை இத்தாலியில் பிறந்திருக்கிறது’’ என்ற செய்தியை சொன்னேன். ‘‘இப்பொழுது தாய்மார்கள்கூட, ஒரு புதுவகையான தாய்மார்கள் வந்துவிட்டார்கள். தங்களுடைய கருப்பையை கருவிலிருந்து குழந்தையாக வளர்த்து, பெற்றெடுக்கப் பயன்படுத்துகிறார்கள்’’ என்று சொன்னோம்.

இன்னொரு புதிய அதிசயம் அய்யா என்றேன்.

என்ன? என்று கேட்டார் அய்யா.

‘‘இல்லஸ்ட்ரேட்டட் வீக்லி ஆஃப் இந்தியா’’

இப்பொழுது ‘‘ஸ்பெர்ம் பாங்க்‘‘ (Sperm Bank)   என்று ஒன்றை உருவாக்கியிருக்கிறார்கள். ஆணினுடைய விந்தை எடுத்துப் பாதுகாக்கலாம். பத்தாண்டுகள் வரை பாதுகாக்கலாம். அந்த விந்தை ஊசிமூலம் பெண்ணின் கருப்பைக்குள் செலுத்திவிட்டால், அவர்களுக்குக் குழந்தை பிறக்கக்கூடிய வாய்ப்பு இருக்கிறது என்று ‘‘இல்லஸ்ட்ரேட்டட் வீக்லி ஆஃப் இந்தியா’’ பத்திரி கையில் செய்தி வெளிவந்திருக்கிறது என்று அந்தப் புத்தகத்தைக் காட்டினேன்.

உடனே தந்தை பெரியார் அவர்கள், சின்னக் குழந்தைபோல கைதட்டி, ஒரு வார்த்தை சொன்னார். 

அதை நான் தோழர்களிடம் பகிர்ந்துகொள்கிறேன்.

பெரியார் நெடுஞ்சாலையிலிருந்து தியாகராயர் நகரை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது வேன். 

‘‘விஞ்ஞானம் எப்படி வளர்ந்துகொண்டிருக்கிறது பாருங்கள் - ஆனால், நம் நாட்டில் குழவிக் கல்லைக் கட்டிக்கொண்டு அலைகிறார்கள்’’ என்று வேதனைப் பட்டார்.

‘இனிவரும் உலகம்’ புத்தகத்தின் முன்னுரை

எனவே, அறிவியல் மனப்பான்மை, புத்தாக்கச் சிந்தனைகள் எல்லாம் வரும்போது, ‘இனிவரும் உலகம்’ புத்தகத்திற்கு - முன்னுரை எழுதியிருக்கிறார் பெரியார்.

அந்த முன்னுரையின் கருத்துரையைப்பற்றி நிறைய சொல்லிக் கொண்டே போகலாம்.

அதனுடைய முக்கியத்துவத்தைப்பற்றி சொல்கிறேன்.

‘‘இன்றைய உலகமானது, பழங்கால உலகம் என்பதிலிருந்து நாளுக்கு நாள் எப்படி மாறுதல டைந்து வந்திருக்கிறது? இனி சில நூற்றாண்டுகளில் எப்படிப்பட்ட மாறுதலை அடையும்? என்பன வாகிய விஷயங்கள் பகுத்தறிவுவாதிகளுக்குத்தான் ஏதாவது தெரியக்கூடுமே தவிர, புராண இதிகாச பண்டிதர்கள் என்பவர்களுக்கு அதுவும் நம் கலை காவியப்  பண்டிதர்களுக்கு தெரிவது சுலபமான காரியமல்ல.

ஏனெனில், நமது பண்டிதர்கள் பகுத்தறிவுக்கு ஒவ்வாத புராணங்களையும், ஆராய்ச்சிக்குப் பொருந்தாத இலக்கியங்களையும், பிரத்தியட்ச அனுபவத்திற்கு சம்பந்தப்படுத்த முடியாத கலை காவியங்களையும் படித்து உருப்போட்டு, அவை களிலிருப்பவைகளை அப்படியே மனதில் பதிய வைத்துக் கொண்டிருப்பதோடல்லால், அவை களில் சம்பந்தப்பட்ட கதை கற்பனைகளை உண்மையாக நடந்தவைகள் என்றும் நம்பிக் கொண்டிருப்பவர்கள் ஆவார்கள்.

பகுத்தறிவுவாதிகள் அந்தப் படிக்கில்லாமல், அனுபவத்தையும், தங்கள் கண்களில் தென்படும் காட்சிகளையும் வஸ்துகளின் குணங்களையும், அவற்றின் மாறுதல்களையும் இயற்கையின் வழிவ ழித் தன்மைகளையும், அவற்றால் கண்டுபிடிக்கப் பட்டு வரும் புதுமை அதிசயங்களையும், மனி தனுக்கு முன் காலத்தில் இருந்து வந்த அறிவாற் றலையும் சிந்தித்து, இன்று உள்ள அறிவையும், ஆற்றலையும் இனி ஏற்படும் அறிவாற்றலையும், சாதனங்களையும் மற்றும் இவை போன்றவை களையும் ஆராய்ச்சிக் கண்களோடு பார்ப்பவர் களாவார்கள்.

பண்டிதர்கள் பழங்காலத்தையே சரியென்று கருதிக் கொண்டு, அதற்கே புது உலகம் என்று பெயர் கொடுத்து அங்கே செல்லவேண்டுமென்று அவாவுடையவர்கள். பகுத்தறிவுவாதிகள் எவரும் ஓரொரு விநாடியையும் புதிய காலமாகக் கருதி புதிய உலகத்திற்குப் போவதில் ஆர்வமுள்ளவர்கள். பண்டிதர்கள் என்பவர்கள், எந்த நாட்டிலும் இப்படித்தான் இருப்பார்கள் என்று நாம் சொல்ல வரவில்லை. நம் நாட்டு பண்டிதர்கள் என்பவர் களில் பெரும்பாலோரைக் கருதித்தான் நாம் இப்படிச் சொல்கின்றோம்; ஏனெனில், நம் நாட்டுப் பண்டிதரென்பவர்களுக்குப் பகுத்தறிவு ஏற் படவோ, அது வளர்ச்சியடையவோ முடியாமல் தடை செய்யத் தகுதியான மாதிரியிலேயே அவர்களது படிப்பும், பரீட்சையும் இருக்கிறது. ஆதலால், நம் பண்டிதர் என்பவர்களுக்குப் பகுத்தறிவு ஏற்படுவதற்குத் தடையாக இருப்பது அவர்களது படிப்பே ஒழிய, அவர்களது அறிவுக் குறைவன்று, தவறிக் கீழே விழுந்த பிள்ளைக்கு அரிவாள் எதிரில் இருந்தால், எப்படி அதிகக்காயம் ஏற்படுமோ, அதுபோல புராண இதிகாச கலைச் சேற்றில் விழுந்த நம் பண்டிதர்களுக்கு இயற்கை வாசனை அறிவால் ஏற்படக் கூடிய பகுத்தறிவையும் பாழ்படுத்தத் தக்க வண்ணம், மூடநம்பிக்கைச் சமய (மத)ங்கள் என்னும் விஷப்பாம்புகள் அவர் களைக் கரையேற விடாதபடி சுற்றிக் கொண்டி ருக்கின்றன.

நம் மதவாதிகள் சிறப்பாக இந்து மதவாதிகள் என்பவர்கள் பண்டித மதவாதிகளைவிட மோச மானவர்கள். பண்டிதர்கள் ஆயிரக்கணக்கான வருஷங்களுக்கு முன்னால் இருந்த உலகத்துக்குப் போகவேண்டுமென்றால், மதவாதிகள் பதினாயிரக்கணக்கான வருஷங்களுக்கு பல யுகங் களுக்கும், முன்னால் இருந்த உலகத்துக்குச் செல்ல வேண்டுமென்பார்கள். இவர்கள் இருவருக்கும் பகுத்தறிவுக்குப் பொருத்தமில்லாததும், மனித சக்திக்கு மீறினதுமான காரியங்களிலும், அசாத்திய மான கற்பனைகளிலுந்தான் நம்பிக்கையும், பிரிய மும் இருக்கும். ஆகவே, இப்படிப்பட்ட இவர்களால் கண்டறியப்படும் புது உலகம், காட்டுமிராண்டிகள் வசிக்கும் உலகமாக இருக்கும் என்பதையும், அவர்களை மதிக்கும் மக்கள் பெரும்பாலும் மூடநம்பிக்கையில் மூழ்கிய காட்டுமிராண்டிகளாய் இருப்பார்கள் என்பதையும் எடுத்துக்காட்ட வேண் டியதில்லை. ஆதலால் தான் பழையவைகளுக்கே மதிப்பும், மரியாதையும் வைத்திருப்பவர்களால், மாறுதலின் சக்தியும், அம்மாற்றத்தின் தன்மையும், அதனால் ஏற்படும் பயனும் உணர்ந்துகொள்ளவோ, எதிர்பார்க்கவோ கூட முடியாது என்று சொல்ல வேண்டியதாயிற்று.

பழையவைகளை ஏற்கும் அளவுக்கு, நற்பயன் தரவேண்டிய அளவுக்கும் உபயோகித்துக் கொள்ளவேண்டியது அவசியம் என்பதை நாம் வலியுறுத்துவதில் பின்வாங்கமாட்டோம். ஆனால், புதியவற்றிலேயே முயற்சியும், ஆராய்வதில் ஆர்வமும் இருக்கவேண்டியது அவசியமாகும். ஏனெனில், அவற்றில்தான் இயற்கையைப் படிப் பது என்பதோடு புதியவற்றைக் கண்டுபிடிப்பதும், முற்போக்கு அடைவதும் (இன்வென்ஷன் ப்ராக்ரஸ்) சுலபத்தில் சாத்தியமாகலாம்.

இன்று உலகத்தின் வேறு பல பாகங்களில் உள்ளவர்களால் கண்டுபிடிக்கப்பட்ட பல அற்புதங் களும், அப்பாகங்கள் அடைந்துள்ள முற்போக்கு களும் முதலாகியவை எல்லாம் அந்நாட்டவர்கள், பழையவற்றோடு திருப்தி அடைந்து, அதுவே முடிவான பூரண உலகம் என்று கருதி, அப் பழையவற்றையே தேடிக்கொண்டு திரியாமல், புதியவற்றில் ஆர்வங்கொண்டு, நடுநிலைமை அறிவோடு முயற்சித்ததன் பலனாலேயே ஏற்பட்ட வைகளாகும். அவை இன்று எல்லா மக்களாலும் ஆதரவோடு அனுபவிக்கப்படுகின்றன.

ஆகவே, இதை உணர்ந்தவர்கள்தான் இனி சில நூற்றுக்கணக்கான ஆண்டுகளில் எப்படிப்பட்ட உலகத்தைக் காணலாம்; அதற்கு என்ன முயற்சி செய்யலாம் என்பதை ஒருவாறு கற்பனைச் சித்திர மாகவாவது தீட்ட முடியும்.

- ஈ.வெ.ரா

இன்று வந்திருக்கின்ற புதிய கண்டுபிடிப்புகளுக் கெல்லாம் இது அற்புதமான அறிவியல் விளக்கமாகும்.

அதில் ஒரு பத்தி இருக்கிறதே, அது எவ்வளவு ஆழமான சிந்தனை!

இந்த சிந்தனைகளை கற்பனை போன்று முதலில் சொன்னார்; அவை அத்தனையும் நடைமுறை. அதை யும் பார்த்துவிட்டார். பரிசோதனைக் குழாய் குழந்தை (டெஸ்ட் டியூப் பேபி) வந்ததையும் நடைமுறையில் கண்டார்.

‘பெண் ஏன் அடிமையானாள்?’

அதேபோன்று, ‘பெண் ஏன் அடிமையானாள்?’ என்று கேட்டார்.

அந்தப் பெண்ணுக்குச் சுதந்திரம் வேண்டும் என்றார்.

அவருடைய அத்தனை கருத்துகளையும் - அண்ணா அவர்கள் சொன்னதுபோன்று, வாழ்நாளிலேயே அவ ருடைய கொள்கையின் வெற்றியை சுவைத்த தலைவர், பார்த்த தலைவர், அனுபவித்த தலைவர், மகிழ்ந்த தலைவர் தந்தை பெரியார்.

சுயமரியாதைத் திருமணம், அவருடைய தொண் டர்களாலேயே சட்டவடிவமாக்கப்பட்டது.

இன்றைக்கு வருகின்ற அறிவிப்புகள் எல்லாம் அதனுடைய தொடர்ச்சிதானே!

பெரியாருக்காக அல்ல -  தமிழ்நாட்டினுடைய பெருமை

ஆகவே நண்பர்களே, 21 மொழிகளில் பெரியார் என்று சொல்வது, அது பெரியாருக்காக அல்ல - தமிழ்நாட்டினுடைய பெருமையைக் காட்டு வதாகும்.

பல மடங்கு பெருகும் 

பெரியாருடைய கருத்துகள்

‘‘வள்ளுவன்தன்னை உலகினிற்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு’’ என்று சொல்கி றோமே, அது போன்று பல மடங்கு பெருகும் பெரியாருடைய கருத்துகள்.

இதற்கு முட்டுக்கட்டை போடலாமா? என்று நினைக் கிறார்கள். ஏனென்றால், அவர்கள் பழைமையைப் பிடித்துக்கொண்டு வளரலாம் என்று நினைக்கிறார்கள். ஒருக்காலும் அது முடியாது.

அறிவியல் வெற்றி பெற்றே தீரும்!

அறிவியலுக்கு எதிரான சக்திகள், கருத்துகள் செல்லரித்தவையாகும்.

என்னதான் ஆட்சி அதிகாரம், பிரச்சாரங்கள், ஏடுகள் எல்லாம் இருந்தாலும், அதனைக் குத்திக் கிழித்துக் கொள்ளக்கூடிய அன்பு - மிகப்பெரிய அளவிற்கு ஏவுகணை போன்று பெரியாருடைய கருத்துகள் போய்ச் சேரும்.

அதையும் அண்ணா அவர்கள் அழகாகச் சொன்னார்-

நேராகப் போய்ச் சேரும் -சேரவேண்டிய இடத்தைப் போய்ச் சேரும். சேரும் வரையில், அதற்கு வேறு குறிக்கோள் கிடையாது.

அப்படிப்பட்ட எண்ணத்தில் வந்ததினால்தான் இன் றைக்குப் பெரியார்  கருத்துகள் உலக சிந்தனையாளர்கள் மத்தியிலேயே வந்துவிட்டது.

எத்தனை ஆண்டுகளுக்கு முன்பாக - பெரியாரு டைய கருத்துகள் நடைமுறைக்கு வந்துவிட்டது?

நோபல் பரிசு வாங்கிய அறிஞர்கள் பெரியாரைப்பற்றி சிந்தித்திருக்கிறார்கள்; தெரிந்திருக்கிறார்கள்!

பெரியாருக்கு நோபல் பரிசு கிடைக்காமல் இருக்கலாம். ஆனால், நோபல் பரிசு வாங்கிய அறிஞர்கள் எல்லாம், பெரியாரைப்பற்றி சிந்தித் திருக்கிறார்கள்; தெரிந்திருக்கிறார்கள். பெரியாரு டைய கருத்து அங்கே வேகமாக நுழைந்து வந்திருக்கிறது.

உதாரணத்திற்கு சுருக்கமாக ஒன்றை உங் களுக்குச் சொல்கிறேன்.

ஸ்சுவீடன் நாட்டைச் சேர்ந்த ‘ஏசியன் டிராமா’ என்ற நூலை எழுதிய பொருளாதார அறிஞர் குன்னர் மிர்டல் அவர்களுக்குப் பொருளாதாரத் திற்காக நோபல் பரிசு கொடுத்தார்கள்.

அவர் இந்தியாவைப்பற்றி சொல்லுகின்ற நேரத்தில், ‘‘ஜாதியை ஒழிக்கவேண்டுமானால், அதற்கு ஓர் அறுவை சிகிச்சை செய்யவேண்டும்.’’

பெரியாருடைய கருத்துதானே இது?

‘‘எனக்கு யார்மீதும் கோபம் இல்லை. என்னு டைய மக்கள் சமத்துவமாக இருந்தால், இன்றைக்கு சமநோக்கு இருக்கும், சம ஈவு இருக்கும், சமதர்மம் இருக்கும். இன்னாருக்கு இதுதான் என்று இருக் காது. எல்லோருக்கும் எல்லாமும் இருக்கும். அனைவருக்கும் அனைத்தும் இருக்கும். இதுதான் சமூகநீதி.

இந்தத் தத்துவம் உலகளாவிய நிலைக்குப் போனால், சுரண்டப்படுபவன், சுரண்டுகிறவன் மாறமாட்டார்களா?’’

அதை மாற்றுவதற்கு இது பெரிய அறிவாயுதம் அல்லவா!

அந்த சிந்தனைகளை நீங்கள் நன்றாக எண் ணிப் பார்க்கவேண்டும் தோழர்களே!

இந்தியாவினுடைய பெருமைகள் என்று வருகின்ற நேரத்தில், பல பெருமைகள் இந்தியாவில் இருக்கிறது என்று சொன்னால், அவர் வந்து நேரிடையாகச் சொல்லாமல், பெரியார் என்று இதில் ஒன்றும் ரெபரன்ஸ் இல்லீங்க என்று நினைக்கலாம்.

பிரெஞ்சு நாட்டவர் ஜீன் ட்ரேசே

அதற்குப் பிறகு அமர்த்தியாசென்.

இன்றைக்குப் பொருளாதார குழுவில் இருக்கக்கூடிய பிரெஞ்சு நாட்டவர் ஜீன் ட்ரேசே (யிமீணீஸீ ஞிக்ஷீமீக்ஷ்மீ).

இதில் பெரியாரைப்பற்றி, பெரியாருடைய இயக்கத்தைப்பற்றி, பெரியாருடைய பணிகளைப்பற்றி சுட்டிக்காட்டியிருக்கிறார்கள்.

பெரியார் என்ன சொன்னாரோ, அந்தக் கருத்துகள்-

சமத்துவம் இல்லை - பேதம் இருக்கிறது - அந்த பேதத்தை நீக்கவேண்டும்.

பெரியார் எப்படிப்பட்டவர்?

காலத்தை வென்றவர்களாக - ஜாதியை எதிர்த்த வர்களாக இருந்தார்கள்.

பெரியார் ஒரே வார்த்தையில் சொன்னார் - பிறவி பேதம் கூடாது என்று.        (தொடரும்)


No comments:

Post a Comment