சென்னை, ஏப்.1 2024ஆம் ஆண்டு வரை புதிய பொறியியல் கல்லூரி களுக்கு அனுமதி கிடையாது என அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் தெரிவித்துள்ளது.
பொறியியல் கல்வியின் தற் போதைய போக்கு, குறைவான மாணவர் சேர்க்கை ஆகியவை குறித்து ஆராய அய்தராபாத் அய். அய்.டி. தலைவர் பி.வி.ஆர். மோகன்ரெட்டி தலைமையிலான குழு அமைக்கப்பட்டது.
இந்த குழு பொறியியல் மற்றும் டிப்ளமோ படிப்புகளில் தற் போதுள்ள மோசமான மாணவர் சேர்க்கை மற்றும் வேலைவாய்ப்பு போக்குகளை காரணம் காட்டி, 2024ஆம் ஆண்டு வரை புதிய பொறியியல் கல்லூரிகள் அமைப்ப தற்கான தடையை தொடர பரிந் துரைத்தது.
அந்த பரிந்துரையை ஏற்று அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் (ஏ.அய்.சி.டி.இ.) 2024ஆம் ஆண்டு வரை புதிய பொறியியல் கல்லூரிகளுக்கு அனுமதி கிடை யாது என்று அறிவித்துள்ளது.
மேலும் அந்த குழு அளித்த பரிந்துரையின் அடிப்படையில் 95 சதவீதம் முதல் 100 சதவீதம் மாணவர் சேர்க்கை உள்ள நிறுவ னங்களில் 25 சதவீதம் கூடுதல் திறனையும், 80 சதவீதம் முதல் 95 சதவீதம் வரை மாணவர் சேர்க்கை உள்ள நிறுவனங்களில் 15 சதவீதம் கூடுதல் திறனையும் ஏ.அய்.சி.டி.இ. அனு மதித்து இருக்கிறது.
ஏ.அய்.சி.டி.இ. தனது புதிய வழிகாட்டுதல்களில் மாணவர் களுக்கு பலவகையான நுழைவு மற்றும் வெளியேறும் விருப்பங் களை வழங்கியிருக்கிறது.
அதன் படி, முதலாம் ஆண்டு பொறியியல் படிப்பில் இருந்து வெளியேறும் மாணவர்கள் இள நிலை சான்றிதழையும், 2ஆம் ஆண்டில் வெளி யேறும் மாண வர்கள் இளநிலை டிப்ளமோ மற்றும் 3ஆம் ஆண்டில் வெளியே செல்லும் மாணவர்கள் இளநிலை தொழிற் கல்வி சான்றிதழையும் பெறுவார்கள் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.
No comments:
Post a Comment