பெரியார் மணியம்மை அறிவியல் தொழில்நுட்ப நிறுவனத்தில் உலக புத்தக தினவிழா - 2022 - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, April 27, 2022

பெரியார் மணியம்மை அறிவியல் தொழில்நுட்ப நிறுவனத்தில் உலக புத்தக தினவிழா - 2022

தஞ்சை, ஏப். 27- பெரியார் மணி யம்மை அறிவியல் மற்றும் தொழில் நுட்ப நிறுவனத்தில் உலக புத்தகம் மற்றும் காப்புரிமை தினவிழா 22.04.2022 அன்று கொண்டாடப்பட்டது. இவ் விழாவினைப் பல்கலைக்கழக அர்ஜூன் சிங் நூலகம் மற்றும் மொழிகள் துறை இணைந்து நடத்தியது. இவ்விழாவானது நிறுவனத்தில் உள்ள அய்ன்ஸ் டின் அரங்கத்தில் நடை பெற் றது. 

இந்நிகழ்ச்சியின் தொடக்க மாக நூலக இயக்குநர் (பொ) முனைவர்.த.நர்மதா வரவேற் புரை ஆற்றினார். 

தனது முதன்மை உரையில் பதிவாளர் முனைவர் பி.கே.சிறீவித்யா நூலகத்திற்கு புத்த கங்கள் நன்கொடையாக வழங் கியவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கினார், 

மேலும் தனது உரையில் நூல் வாசிப்பின் அவசியத்தை யும் நிறுவன நூலகத்தில் உள்ள வசதிகளை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்த வேண்டியும் மேலும் வளர்ந்து வரும் அறிவியல் பற்றி அன்றாடம் நூல் கள் வழியாகவோ, இணைய தள வழியாகவோ, அறிந்து வரு வதின் அவசியத்தை உணர்த் தினார். ஒவ்வொரு மாணவரும் ஆசிரியரும் தனது பிறந்த நாளன்று புத்தகங்களை நன் கொடையாக நூலகத்திற்கு கொடுக்கலாம் என்ற பழக் கத்தை அனைவரும் மேற் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார். 

புல முதன்மையர் முனைவர் பொ.விஜயலெட்சுமி, வாழ்வியல், அறிவியல் மற்றும் மேலாண்மை புலம், புத்தக வாசிப்பின் அவசியத்தையும் மாணவர்கள் நிறுவன நூல கத்தை முதன்மையாக பயன் படுத்திக்கொள்ள வேண்டும் என்று எடுத்துக் கூறினார். 

இந்நிகழ்ச்சியில் உதவி நூல கர் முனைவர் கி.ராஜி சிறப்பு விருந்தினரின் சிறப்புகளை எடுத்துக் கூறினார். 

சிறப்பு விருந்தினரான மன் னர் சரபோஜி அரசுக் கல்லூரி ஆங்கிலத்துறை உதவிப் பேராசி ரியர், முனைவர் லெ.பாஸ்கரன், படித்தல் மற்றும் சிந்தனை செய்தல் என்ற தலைப்பில் உரையாற்றினார். அவர் தனது உரையில், நூல் வாசிப்பின் அவசியத்தையும், பல தலை வர்கள் புத்தக வாசிப்பினால் வளர்ந்த விதம் பற்றியும், இன் றைய இளைஞர்களுக்கு மறந்து போன எழுத்தாளர்கள் பற்றி யும் அறிவியல் அறிஞர்கள் பற் றியும், உரையாற்றினார். வாசிப் பது தேர்வுக்காக அல்ல வாசிப் பது வாழ்க்கைக்காக பயன்பட வேண்டும் என்று அறிவுறுத் தினார். 

இறுதியில் மொழியியல் துறை தலைவர் முனைவர் க.செல்வம் நன்றி கூறினார்.

No comments:

Post a Comment