துபாய், ஏப். 4- துபாய் எக்ஸ்போ 2020 கண்காட்சியின் உயர்மட்டக் குழுவின் தலைவரும், எமிரேட்ஸ் விமான நிறுவனத்தின் தலைவரும், துபாய் சிவில் விமான போக்குவரத்து ஆணையத்தின் தலைவரு மான ஷேக் அகமது பின் சயீத் அல் மக்தூம் கூறிய தாவது:-
“துபாய் நகரில் வளை குடா மற்றும் மத்திய கிழக்கு பகுதியில் முதன் முறையாக எக்ஸ்போ 2020 கண்காட்சி கடந்த ஆண்டு (2021) அக்டோ பர் மாதம் 1ஆம் தேதி முதல் கடந்த மார்ச் மாதம் 31ஆம் தேதி வரை நடந்தது. இந்த கண்காட் சியில் அய்க்கிய அரபு அமீரகம், இந்தியா, ஓமன், சவுதி அரேபியா உள்ளிட்ட 192 நாடுகள் பங்கேற்றன.
மனங்களை இணைத்து, எதிர்காலத்தை உருவாக் குவோம் என்ற தலைப்பில் நடந்த இந்த பன்னாட்டு கண்காட்சி உலகின் பல் வேறு நாட்டை சேர்ந்த வர்களையும் ஊக்கப்படுத் தும் வகையில் அமைந் திருந்தது. நாள்தோறும் இந்த கண்காட்சியை அமீரகம் மட்டுமல்லாது பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்கள் பார்வையிட்டனர். அந்த வகை யில் மொத்தம் 182 நாட் கள் நடந்த இந்த கண் காட்சியை 2 கோடியே 41 லட்சத்து 2 ஆயிரத்து 967 பேர் பார்வையிட்டுள்ள னர்.
துபாயில் நடந்த இந்த ‘எக்ஸ்போ 2020' கண் காட்சி மிகப்பெரிய வெற் றியாக அமைந்துள்ளது. இது ஒற்றுமை மற்றும் நம்பிக்கையின் கலங்கரை விளக்கமாக திகழும் வகையில் இருந்துள்ளது.
அமீரகத்தின் 50ஆவது ஆண்டு தேசிய தினம் கொண்டாடப் பட்டு வரும் இந்த வேளை யில் இந்த கண்காட்சி வரலாற்றில் முக்கியமான இடத்தை வகிக்கும். இத் தகைய சிறப்பான உலக கண்காட்சியை நடத்துவ தற்கு ஆதரவு அளித்த அமீரக தலைவர்களுக்கு எனது இதயபூர்வமான நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.”
இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment