தமிழ்நாடு அரசு விரைவு பேருந்துகளில் பெண் பயணிகளுக்கு 2 படுக்கைகள் தனி ஒதுக்கீடு அரசு உத்தரவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, April 2, 2022

தமிழ்நாடு அரசு விரைவு பேருந்துகளில் பெண் பயணிகளுக்கு 2 படுக்கைகள் தனி ஒதுக்கீடு அரசு உத்தரவு

சென்னை, ஏப்.2 -தமிழ்நாடு அரசு விரைவு பேருந்துகளில் பெண் பயணிகளுக்கு 2 படுக்கைகளை தனி ஒதுக்கீடாக வழங்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. 

அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தால் இயக்கப்படும் பேருந்துகளில், அதாவது படுக்கை வசதி கொண்ட குளிர்சாதன பேருந்துகள்; இருக்கை மற்றும் படுக்கை வசதி கொண்ட குளிர்சாதன வசதி கொண்ட மற்றும் குளிர்சாதன வசதி இல்லாத பேருந்துகள் ஆகியவற்றில், பெண்களுக்கு தனியாக படுக்கை எண்.1 எல்.பி. மற்றும் 4 எல்.பி. 

ஆகிய படுக்கைகளை ஒதுக்கீடு செய்து இணையதளத்தில் முன்பதிவு செய்துகொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.

எனவே இனிவரும் காலங்களில் அந்த படுக்கைகளில் முன்பதிவு செய்த பெண் பயணிகளுக்கு அதை ஒதுக்கீடு செய்து தரவும், பேருந்து புறப்படும் வரை அந்த படுக்கைகளில் பெண் பயணிகள் யாரும் முன்பதிவு செய்யாதபட்சத்தில் அதை பொது படுக்கையாக கருதி மற்ற பயணிகளுக்கு ஒதுக்கீடு செய்துதர வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

No comments:

Post a Comment