1 லட்சம் பட்டதாரிகளுக்கு வேலை வழங்க இலக்கு தொழிலாளர் நலத்துறை அமைச்சர் தகவல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, April 27, 2022

1 லட்சம் பட்டதாரிகளுக்கு வேலை வழங்க இலக்கு தொழிலாளர் நலத்துறை அமைச்சர் தகவல்

சென்னை, ஏப்.27- ஒரு லட்சம் பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்பு பெற்றுத் தரப்படும் என்று சட்டப் பேரவையில் நேற்று (26.4.2022) தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி. கணேசன் தெரிவித்தார். 

பட்டதாரி இளைஞர்கள் ஒரு லட்சம் பேருக்கு முகாம்கள் மூலம் வேலை வழங்கப்படும் என்று தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் தெரிவித்துள்ளார். ஏற்கெனவே 70 ஆயிரம் இளைஞர்களுக்கு தனியார் துறையில் வேலை வாங்கி கொடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதுகுறித்து அவர் கூறும்போது, 'படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்குவது தான் எங்களது தலையாய கடமை. இதற்காக தமிழ்நாட்டில் இதுவரை 56 இடங் களில் வேலைவாய்ப்பு முகாம்களை நடத்தி 70 ஆயிரம் பேருக்கு தனியார் துறையில் வேலைவாய்ப்பு பெற்றுத் தரப்பட்டுள்ளது.  வருகிற ஆகஸ்ட் மாதத்திற்குள் நிச்சயம் ஒரு லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு பெற்றுத் தரப்படும். அரசு அய்டிஅய்-யில் 89 சதவீத மாணவர்கள் சேர்ந்திருக் கிறார்கள். அவர்களில் 70 சதவீதம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது' இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment