சென்னை மாநகர மேயர், துணை மேயர் தமிழர் தலைவருக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்
சென்னை, ஏப்.27 வெள்ளுடை வேந்தர் சர்.பிட்டி தியாகராயர் அவர்களின் 171ஆம் ஆண்டு பிறந்தநாளான இன்று அவரது சிலைக்கு தமிழர் தலைவர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
நீதிக்கட்சியின் முக்கிய தோற்றுநர், முதன் முதலில் சென்னையில் மதிய உணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்திய வள்ளல், சென்னை மாநகர முதல் மேயர், வெள்ளுடை வேந்தர், சர்.பிட்டி தியாகராயரின் 171ஆம் ஆண்டு பிறந்தநாளான இன்று (27.4.2022) காலை 10 மணிக்கு சென்னை மாநகராட்சி மன்றம் (ரிப்பன் பில்டிங்) முகப்பில் உள்ள அவர்தம் சிலைக்கு திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் மலர் மாலை அணிவித்தும், படத்திற்கு மலர் தூவியும் மரியாதை செலுத்தினார்.
முன்னதாக ரிப்பன் கட்டடம் நுழைவு வாயிலில் தமிழர் தலைவர் சென்றவுடன் அவருக்கு சென்னை மாநகர மேயர் திருமதி ஆர். பிரியா, துணைமேயர் மு.மகேஷ்குமார் ஆகியோர் பூங்கொத்துக் கொடுத்து வரவேற்றனர்.
இந்நிகழ்வில் திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ், பொருளாளர் வீ.குமரேசன், துணைப் பொதுச் செயலாளர் பொறியாளர் ச.இன்பகனி, வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி, மாநில அமைப்புச் செயலாளர் வி.பன்னீர்செல்வம், பெரியார் புத்தக நிலைய மேலாளர் த.க.நடராசன், திராவிட மாணவர் கழக மாநில செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், சோழிங்கநல்லூர் மாவட்டச்செயலாளர் ஜெயராமன், தென்சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன், செயலாளர் செ.ர.பார்த்தசாரதி, கோ.வீ.ராகவன், செங்குட்டுவன், சூளைமேடு ராஜேந்திரன், அரும்பாக்கம் சா.தாமோதரன், தமிழ்ச்செல்வன், பெரியார் நூலக வாசகர் வட்ட செயலாளர் சத்திய நாராயணன், தஞ்சை மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் சி.அமர்சிங், கும்பகோணம் ஆடிட்டர் சண்முகம், சோ.சுரேஷ், நாத்திகன், திண்டிவனம் சிறீராமுலு, வெள்ளுடை வேந்தர் சர்.பிட்டி.தியாகராயர் பேரவை மாநிலத் தலைவர் மகா.பாண்டியன், பெரியார் சுயமரியாதை திருமண நிலைய இயக்குநர் பசும்பொன் செந்தில்குமாரி, த.மரகதமணி, மு.பவானி, பெரியார் வலைக்காட்சி முத்துலட்சுமி, தொழிலாளரணி ராஜிவ், க.கலைமணி, மகேஷ், மற்றும் திரளான தோழர் - தோழியர்கள் பங்கேற்றனர்.
No comments:
Post a Comment