பெய்ஜிங், ஏப். 4- உலகில் முதன் முதலாக கரோனா கண்டறி யப்பட்ட நாடு சீனா. கடந்த 2019ஆம் ஆண்டு கரோனா சீனாவின் உகான் நகரில் தோன்றி உலக நாடுகளை ஒரு கை பார்த்தது. ஆனால், மிகச்சிறப்பாக கையாண்டு கரோனா வைரஸ் பரவலை கட்டுக்குள் வைத்தது. பூஜ்ஜிய கரோனா கொள்கை என கடைப்பிடித்து ஒரு சிலருக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டாலும் ஒட்டு மொத்த நகரத்தையும் ஊரடங்குக்குள் கொண்டு வந்து சீனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தி வருகிறது.
இருப்பினும், கடந்த சில வாரங்களாக அந்நாட்டில் தொற்றுப் பரவல் கட்டுக்கடங்காமல் பரவுகிறது. ஒமைக் ரான் வகை கரோனா சீனாவின் 12 க்கும் மேற்பட்ட மாகாணங்களில் பரவியுள்ளது. இதனால், அந்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 13,146- பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதில், 1,455 பேருக்கு அறிகுறிகளுடன் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 11,691 அறிகுறிகள் இன்றி கரோனா உறுதியாகியுள்ளது. புதிதாக உயிரிழப்பு எதுவும் இல்லை. கரோனா பரவல் காரணமாக சீனாவின் நிதி நகரமான ஷாங்காய் முழுவதும் கடுமையான ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக அந்நகரில் வசிக்கும் 2.5 கோடி பேர் வீடுகளில் முடங்கியுள்ளனர்.
No comments:
Post a Comment