அமராவதி, ஏப்.5- ஆந்திர மாநிலத் தில் தற்போது 13 மாவட்டங்கள் இருக் கின்றன. அவற்றைப் பிரித்து, மேலும் 13 மாவட்டங்கள் உருவாக்கப்படு கின்றன. புதிய மாவட்டங்கள் தொடங் கப்படுவதாக அரசிதழில் வெளியிடப் பட்ட அறிவிக்கையில் தெரிவிக்கப்பட் டுள்ளது.
இந்த அறிக்கை வெளியிடப்பட் டதும், அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ். அதி காரிகளின் பணியிடங்களில் மாற்றங்கள் செய்யப்பட்டு, புதிய மாவட்டங்களுக்கு மாவட்ட ஆட்சியர்களும், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்களும் நியமிக்கப்பட்டனர். ஏற்கெனவே உள்ள 13 மாவட்டங்களைப் பிரித்து, மொத்தம் 26 மாவட்டங்களை உரு வாக்குவதற்கான வரைவு அறிவிக் கையை கடந்த ஜனவரியில் மாநில அரசு வெளியிட்டது. அது தொடர்பான ஆலோ சனைகள், எதிர்ப்புகளையும் வரவேற்றது. கடந்த 2019-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின்போது, தற்போது ஆளுங்கட்சியாக உள்ள ஒய்.எஸ்.ஆர். காங்கிரசின் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி, தாங்கள் வெற்றி பெற்றால் ஒவ்வொரு மக்களவைத் தொகுதியும் ஒரு மாவட்டமாக உருவாக்கப்படும் என வாக்குறுதி கொடுத்தார்.
ஆந்திராவில் 25 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. கிழக்கு கோதா வரி மற்றும் விசாகப்பட்டினத்தில் உள்ள பழங்குடியின மக்கள் பகுதி களை இணைத்து கூடுதலாக ஒரு மாவட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment