சென்னை மாநகராட்சியில் ரூ.1,298 கோடி வரி வசூல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, April 2, 2022

சென்னை மாநகராட்சியில் ரூ.1,298 கோடி வரி வசூல்

சென்னை, ஏப்.2- சென்னை மாநகராட்சியில் ரூ.1,298 கோடி வரி வசூல் செய்யப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை விட அதிகமாகும் என மாநகராட்சி உயர் அதிகாரி தெரிவித்துள்ளார். 

பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் ஆண்டுக்கு இருமுறை சொத்து வரியும், ஆண்டுக்கு ஒருமுறை தொழில் வரியும் வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் (31.3.2022) நிதி ஆண்டு நிறைவடைந்தது. 

இதையடுத்து கடந்த நிதி ஆண்டி பெருநகர சென்னை மாநகராட்சியில் வசூலிக்கப்பட்ட வரி கணக்கு வெளியாகியுள்ளது.

அந்தவகையில் கடந்த 2021-2022 நிதி ஆண்டில் மட்டும் பெருநகர சென்னை மாநகராட்சியில் சொத்து, தொழில் வரி மற்றும் இதர வரிகள் மூலம் ரூ.1,297.70 கோடி வசூலிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இதுகுறித்து மாநகராட்சி உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

கடந்த ஆண்டை விட அதிகம்

பெருநகர சென்னை மாநகராட்சியில் உள்ள சொத்து உரிமையாளர்களிடம் இருந்து ஆண்டுக்கு இருமுறை அதாவது 6 மாதங்களுக்கு ஒருமுறை சொத்து வரி வசூலிக்கப்பட்டு வருகிறது. 

அந்தவகையில் 2021-2022 நிதி ஆண்டில் மட்டும் பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 8.20 லட்சம் பேரிடம் இருந்து ரூ.778.07 கோடி சொத்து வரி வசூலிக்கப்பட்டுள்ளது.

மேலும் பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் ரூ.462.35 கோடி தொழில் வரியாகவும், ரூ.57.28 கோடி இதர வரியாகவும் வசூலிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் 2021-2022 நிதி ஆண்டில் ரூ.1,297.70 கோடி வரியாக வசூலிக்கப்பட்டுள்ளது. 

இது கடந்த நிதி ஆண்டை விட அதிகமாகும். கடந்த 2020-2021 நிதி ஆண்டில் ரூ.471.66 கோடி சொத்து வரியாகவும், ரூ.448.36 கோடி தொழில் வரியாகவும், ரூ.39.32 இதர வரிகள் என மொத்தம் ரூ.959.34 கோடி வரி வசூல் செய்யப்பட்டிருந்தது.

சொத்து வரி செலுத்தாமல் இருக்கும் உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும், அந்த சொத்துகளை பறிமுதல் செய்யவும் திட்டமிட்டுள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment