தென்காசி - நெல்லையில் தமிழர் தலைவர் எழுச்சியுரை!
தென்காசி, ஏப்.5- தமிழ்நாட்டில் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் மதிப்பெண்கள் அடிப்படையில் மருத்துவக் கல்வி அளிக்கப்பட்டு வந்ததை தடுக்கும் வகையில் நீட் எனும் கொடுவாளினைக்கொண்டு மாணவர்களின் மருத்துவக் கனவு சிதைக்கப்படுகிறது. உச்சநீதிமன்றத்தின் பெயரால், ஒன்றிய அரசு திணித்து வந்துள்ள நீட் நுழைவுத் தேர்வை எதிர்த்து, திராவிடர் கழகம், பொதுமக்கள், பெற்றோர், மாணவரிடையே போதிய விழிப்புணர்வை ஊட்டியும், ஒத்த கருத்துள்ள அனைத்துக்கட்சியினரைத் திரட்டியும் தொடர்ந்து களம் கண்டு வருகிறது.
சுயமரியாதை இயக்கம் கண்ட தந்தைபெரியார் வழியில் அடித்தட்டு மக்களின், ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களின் உரிமைக்கான இயக்கமாக, சமூகத்தில் பீடித்திருக்கும் மூடநம் பிக்கை நோயினை தீர்க்கும் அருமருந்தாக தந்தைபெரியார் கண்ட பகுத்தறிவு இயக்கமாம் திராவிடர் கழகத்தை எவ்வித சபலங்களுக்கும் ஆளாகாமல் தொண்டர்களை கட்டுப்பாட்டுடன் வழிநடத்தி வரும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் அவ்வப்போது பார்ப்பனீய மேலாதிக்கம் எவ்வழியில் தோன்றினாலும் தொலைநோக்குப் பார்வையுடன் சுட்டிக்காட்டி எச்சரித்து வருவதுடன், அதனை முறியடிக்க அயராது களம் கண்டு வருகிறார்.
தமிழ்நாடு சட்டமன்றத்தில் நீட் தேர்விலிருந்து விலக்குக் கோரும் சட்ட வரைவுகளை ஒரு மனதாக நிறைவேற்றியுள்ள நிலையில், ஒன்றிய அரசு, தமிழ்நாட்டின் ஆளுநரும் அதனை நிறைவேற்ற விடாமல் முட்டுக்கட்டை போட்டபடி உள்ளநிலையில், அதனைக் கண்டித்து தமிழ்நாடுமுழுவதும் கொந்தளிப்பான சூழல் ஏற்பட்டு வருகிறது.
ஆட்சியில் யார் இருந்தாலும், மக்கள் நலனை முன்னிறுத்தி களம் காண்பதில் கழகத் தலைவர் தீவிரம் காட்டி வருகிறார். மாநில உரிமைகளை, அரசமைப்பு உரிமைகளைக் கட்டிக்காக்கும் தொடர்போராட்டக்களத்தின் ஒரு பகுதியாக தற்பொழுது நாகர்கோவில் தொடங்கி சென்னை வரை (ஏப்ரல் 3 முதல் 25 முடிய) பரப்புரை பெரும்பயணம் மேற்கொண்டுள்ளார் தமிழர் தலைவர்.
தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் பரப்புரைப் பெரும்பயணம் நாகர்கோவிலில் பேரெழுச்சியுடன் தொடங் கியது. அனைத்துக்கட்சியினரும், பொதுமக்களும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் உரைகேட்கத் திரண்டிருந்தனர். பயண வழிநெடுகிலும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை உற்சாகத்துடன் வரவேற்றவண்ணம் உள்ளனர்.
தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் தங்கும் இடம் அறிந்து ஆசிரியர் அவர்களிடம் பெருமகிழ்வுடன்சந்தாக்களையும், நன்கொடைகளையும் வழங்கி தங்களின் பேராதரவை தெரிவித்து வருகின்றனர்.
நாகர்கோவிலை அடுத்து தென்காசி, நெல்லையில் நேற்று (4.4.2022) பரப்புரைப் பெரும்பயணம் நடைபெற்றது.
தமிழர் தலைவர் சிறப்புரை
தமிழர் தலைவர் சிறப்புரையாற்றுகையில், மேடையில் அமர்ந்திருந்த தோழமைக் கட்சிப்பொறுப்பாளர்களைப் பார்த்து, ”நீங்கள் திராவிட நாற்றுகள். நடப்பட வேண்டிய வர்கள்'' என்றும், அதுபோலவே எதிரில் அமர்ந்திருந்த மக்களைப் பார்த்து, “இந்தப் பிரச்சாரம் எங்களுக்காகவோ, தி.மு.க.வுக்காகவோ, தோழமைக் கட்சிகளுக்காகவோ அல்ல, உங்களுக்காக, உங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்திற்காக” என்றும் மிகுந்த உற்சாகத்துடன் தொடங்கினார்.
தொடர்ந்து பேசிய அவர், அன்று மருத்துவம் படிக்க சமஸ்கிருதம் கண்ணிவெடி! இன்று ”நீட்” எனும் பெயரில் அதே கண்ணிவெடியை புதைத்து, ஆரியம் திராவிடத்தை அழிக்கப்பார்க்கிறது. அதற்காகத்தான், நமது சமூகநீதிக்கான சரித்திர நாயகர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் தந்தை பெரியார் பிறந்தநாளான செப் 17 அய், சமூகநீதி நாள் என்று அறிவித்து, பார்ப்பனர் உள்பட, அனைவரையும் திராவிடர் இயக்கக் கொள்கைகளை உறுமொழிகளாக ஏற்க வைத்தி ருக்கிறார்'' என்று, இன்று ஏற்பட்டுக்கொண்டிருக்கும் அபா யத்தை தடுக்கும் பணிகளும் நடைபெறுவதைச் சொல்லி மக்களை ஆற்றுப்படுத்தினார்.
திராவிடர் இயக்கக் கொள்கைகள் எவை என்று குறிப் பிடும் போது, “அனைவருக்கும் அனைத்தும்” அவ்வளவுதான் என்று முடித்ததும் மக்கள் மிகுந்த உணர்ச்சியுடன் அதை ஏற்பது போல கைகளைத் தட்டினர்.
மேலும் அவர், நமது பறிபோன உரிமைகளைச் சுட்டிக்காட்ட, “படித்த சூத்திரன், குளித்த குதிரை, மதம் பிடித்த யானை இந்த மூன்றும் ஆபத்தானவை” என்று மனு தர்மத்தில் இருப்பதைச் சொல்லி, ஒரு நூறு ஆண்டுகளாக திராவிடர் இயக்கம் போராடி, இன்று நாடெல்லாம் கல்வி நீரோடை பேதமில்லாமல் பாய்ந்திருக்கிறதே. இந்த வளர்ச்சியைத் தடுக்கத்தான் நீட்டும், புதிய தேசியக்கல்வியும் என்று சொல்லி இந்த ஆபத்தின் கனபரிமாணத்தை விளங்கவைத்தார்.
தனது பேச்சின் போக்கிலேயே, “திராவிட மாடல் இன்று உலகளவில் பேசுபொருளாக மாறியிருப்பதை நினைவூட்டி, “மண்டல் கமிசன் பரிந்துரையை நிறைவேற்றப் போராடியது தமிழ்நாடு. ஆனால், இந்தியாவில் உள்ள அனைத்துப் பிற்படுத்தப்பட்டவர்களுக்கும் அதன் பலன் கிடைத்தது. அதேபோல, மருத்துவ உயர்கல்வியில் 27% இடஒதுக் கீட்டுக்காகப் போராடியது தமிழ்நாடுதான். ஆனால், அதன் பலன் இந்தியா முழுவதுமுள்ள மாணவர்களுக்குக் கிடைத் தது” என்று, நடைமுறையில் திராவிட மாடல் எப்படி இயங்குகிறது என்பதை அன்மைக்கால உதாரணங்களூடன் விளக்கிவிட்டு, “அதனால்தான், நமது முதல்வரை முதலமைச் சர்களில் முதல்வர் என்று குறிப்பிடுகிறார்கள்” என்று மக்களின் ஆரவாரத்திற்கிடையே கூறினார்.
இறுதியாக, அனைவரும் தனது வயதைக்குறிப்பிட்டுப் பேசியதைச் சுட்டிக்காட்டி, “தந்தை பெரியாரைப் போல முடியும் வரை பிரச்சாரம் செய்வேன்! மடியும் வரை பிரச்சாரம் செய்வேன்'' என்று உணர்ச்சியைத் தூண்டக்கூடிய வகையில் பேசி, தனது உரையை நிறைவு செய்தார்.
தொடர்ந்து தென்காசியிலிருந்து பயணித்து திருநெல் வேலிக்கு இரவு 8:50 க்கு வந்து சேர்ந்தார். தோழர்கள் உற்சாகமான வரவேற்பு கொடுத்து மேடைக்கு அழைத்துச் சென்றனர். பொதுச்செயலாளர் முனைவர் துரை. சந்திர சேகரன் பேசி முடித்ததும் தமிழர் தலைவர் தொடர்ந்தார்.
அவர் தனது உரையில், குழுமூர் அனிதாவை நினைவூட்டினார். அவரது வீட்டுக்குத் தானும், எழுச்சித்தமிழர் திருமாவளவனும் சென்று பார்த்ததை உணர்ச்சியுடன் விவரித்தார், அந்த எளிய குடும்பத்தின் நிலை, அவரது தந்தை மூட்டை தூக்கும் பணியைச் செய்வதை சுட்டிக்காட்டி, அப்படிப்பட்ட குடும்பத்தில் பிறந்த அனிதா, 1200 க்கு 1176 மதிப்பெண்கள் பெற்றும், இந்த நீட்டால் இடம் கிடைக்காமல் தற்கொலை செய்துகொண்டதையும், அனிதா ஸ்டெத்தாஸ் கோப்புடன் ஆசையுடன் கிராமத்தில் வலம் வந்து, கிராமத்து மக்களுக்கு மருத்துவம் செய்யும் கனவுடன் இருந்தவர் என்றும் சொல்லிவிட்டு, அப்படிப்பட்ட எளிய குடும்பத்துப் பெண்ணும் மருத்துவர் ஆகலாம் என்ற சூழலை திராவிடம் உருவாக்கி வைத்திருந்தது. அதை ஆரியம் தகர்த்துவிட்டது. ஆனாலும் தமிழ்நாடு விட்டுவிடாது. இதை மாற்றத்தான் இந்தப்பிரச்சாரப் பயணம் என்று சோர்ந்து கிடந்த மக்களுக்கு நாங்கள் இருக்கிறோம் என்று சொல்வது போல பேசி, தனது உரையை நிறைவு செய்தார்.
திராவிடர் இயக்கத்தை
யாராலும் வெல்ல முடியாது!
நீதிக்கட்சிக் காலத்தில் தந்தை பெரியார் போன்றவர்கள் சுட்டிக்காட்டியதன் விளைவாக, மருத்துவக் கல்லூரிக்கு மனு போட சமஸ்கிருதம் தெரிந்திருக்க வேண்டும் என்ற விதியை பானகல் அரசர் நீக்கியிருந்தார். அதன் பிறகுதான் நம் மக்கள் மருத்துவர்களாக வரமுடிந்தது. இதற்குப்பிறகு பானகல் அரசர் திருவல்லிக்கேணியில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண் டிருந்தார். அவருக்குப் பக்கத்தில் இருந்த இரண்டு பார்ப் பனர்கள் சமஸ்கிருதத்தில், பானகல் அரசரைத் திட்டித் தீர்த்துக்கொண்டிருந்தனர். அவர்கள் பேசி முடித்ததும், பானகல் அரசர், “என்னைத் திட்டி முடித்துவிட்டீர்களார்?” என்று சமஸ்கிருதத்திலேயே கேட்டிருக்கிறார். இருவரும் தடுமாறிப்போயிருக்கின்றனர். அன்றைக்கே பானகல் அரசர் சென்னை பிரசிடென்சி கல்லூரியில் சமஸ்கிருதத்தில் கற்றுத்தேர்ந்தவர். ஆகவே திராவிடர் இயக்கத்தை யாராலும் வெல்ல முடியாது.
முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தனது உரையில் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் “சமூகநீதிக்கான சரித்திர நாயகர்” என்று குறிப்பிடும் போது, முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்று குறிப்பிடும் போதும் கருப்புச் சட்டைக்காரர்களும், மக்களும் சேர்ந்து, தாங்களே பாராட் டப்பட்டதைப் போன்று ஒருமித்தும் ஆரவாரத்துடனும் கைகளைத் தட்டித் தட்டி மகிழ்ந்தனர்.’நீட்’ - தேசியக் கல்விக்கொள்கைப் பற்றி
'தினமணி' சொல்வதென்ன?
திராவிடர் கழகமோ, திராவிட முன்னேற்றக் கழகமோ, தோழமைக் கட்சிகளோ சொல்வது இருக்கட்டும் என்று குறிப்பிட்டுவிட்டு, ஒரு செய்தித்தாளை மக்களுக்குக் காட்டி, “இது 1-4-2022 அன்றைய 'தினமணி!' அவாள் நடத்தும் நாளிதழ். சென்னை பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராக இருந்தவர் முனைவர் சாதிக். சிறந்த கல்வியாளர். எந்தக் கட்சியும் சாராதவர். அவரொரு கட்டுரை இதில் எழுதி யிருக்கிறார். அதில் “புதிய தேசியக் கல்விக் கொள்கையை மேலோட்டமாகப் பார்த்தால், அட! பரவாயில்லையே என்றுதான் தோன்றும். ஆனால் உள்ளே படித்தால் தவறாக இருக்கிறது. அதைவிட முக்கியம். இந்த கல்வித்திட்டத்தை வகுத்தவர்களில் ஒருவர்கூட கல்வியாளரே இல்லை” என்பதைச் சுட்டிக்காட்டியுள்ளார் என்று படித்துக்காட்டினார். ”கல்வியாளரே இல்லாமல் கல்வித்திட்டமா?” என்று கேள்வி கேட்டுவிட்டு, இப்படிப்பட்ட கல்வியை தமிழ்நாடு ஏற்காது. அனைத்திலும் தமிழ்நாடு முன்னணியில் உள்ளது. இதைப் பற்றி ரூபாய் 10 க்கு ஒரு புத்தகம் போட்டிருக்கிறோம். அனைவரும் வாங்கிப்படிக்கவேண்டும். அனைவருக்கும் பரப்பவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
- நெல்லைப் பரப்புரைக் கூட்டத்தில்
தமிழர் தலைவர், 4.4.2022
தென்காசி, திருநெல்வேலியில்
தமிழர் தலைவரின் பரப்புரை பயணம்
தென்காசி
நீட் தேர்வு எதிர்ப்பு- தேசிய கல்விக் கொள்கை எதிர்ப்பு- மாநில உரிமை மீட்பு பரப்புரைப் பெரும் பயணக் கூட்டம் தென்காசி புதிய பேருந்து நிலையம் அருகில் மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் த.வீரன் தலைமையில் நடைபெற்றது. மண்டல செயலாளர் அய். இராமச்சந்திரன் அனைவரையும் வரவேற்று பேசினார்.
தென்மாவட்ட பிரச்சார குழு செயலாளர் சீ.டேவிட் செல்லத்துரை, மாநில ப.க. துணை தலைவர் கே.டி.சி.குருசாமி, மாவட்ட செயலாளர் வே.முருகன், மாநில ப.க.துணைத் தலைவர் ம.ஆறுமுகம், பொதுக்குழு உறுப்பினர் பி.பொன்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொடக்கத்தில் மாநில கிராம பிரச் சாரக்குழு அமைப்பாளர் முனைவர் அதிரடி அன்பழகன், திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திர சேகரன் ஆகியோர் உரையாற்றினர். நிறைவாக திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி சிறப்புரை யாற்றினார்.தென்காசி மாவட்ட தி.மு.க.பொறுப்பாளர் சிவ.பத்மநாதன், தென்காசி நகர்மன்றத் தலைவர் சாதீர், ம.தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் தி.மு.இராஜேந்திரன், வாசுதேவநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் சதன்.திருமலைக்குமார், வி.சி.க.மாவட்ட செயலாளர் டேனியல் அருள்சிங்,ஆதித்தமிழர் பேரவை மாவட்ட செயலாளர் கலிவர்ணண், தி.மு.க.கலை இலக்கிய அணி செயலாளர் எழில் வாணன், கீழப்பாவூர் பேரூராட்சி மன்றத் தலைவர் ராஜன், கீழப்பாவூர் நகர செயலாளர் ஜெகதீசன், தி.மு.க. மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் இராஜாமணி உள்ளிட்ட தோழமை கட்சித் தோழர்களும், கழகத் தோழர்களும் ஏராளமான பொதுமக்களும் கலந்து கொண்டனர்.
முடிவில் மண்டல மாணவர் கழக செயலாளர் சவுந்தர பாண்டியன் நன்றி கூறினார்.
தென்காசி நகர் முழுவதும் கழகக் கொடிகள் ஏராளம் கட்டப்பட்டு இருந்தது. சாலையின் இருமருங்கிலும் ஏராளமான பொதுமக்கள் திரண்டு நின்று பரப்புரையை கேட்டனர்.
திருநெல்வேலி
நீட் தேர்வு எதிர்ப்பு- தேசிய கல்விக் கொள்கை எதிர்ப்பு- மாநில உரிமை மீட்பு பரப்புரைப் பெரும் பயணக் கூட்டம் திருநெல்வேலி சிந்துப்பூந்துறை சந்திப்பில் மாவட்ட தலைவர் இரா.காசி தலைமையில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் ச.இராசேந்திரன் அனைவரையும் வரவேற்று பேசினார்.
மண்டல தலைவர் சு.காசி, மாவட்ட அமைப்பாளர் குணசீலன், மாவட்ட காப்பாளர் வேலாயுதம், மாநகர தலைவர் வெயிலுமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொடக் கத்தில் மாநில கிராம பிரச்சாரக்குழு அமைப்பாளர் முனைவர் அதிரடி அன்பழகன், கழகப் பொதுச்செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் ஆகியோர் உரையாற்றினர். நிறைவாக திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி சிறப்புரையாற்றினார்.
காங்கிரசு கட்சி மாவட்ட தலைவர் சங்கரபாண்டியன், சி.பி.எம்.மாநிலக்குழு உறுப்பினர் பாஸ்கரன், வி.சி.க.மாவட்ட செயலாளர் கரிசல் சுரேசு, தமிழ்ப் புலிகள் கட்சி மாவட்ட செயலாளர் தமிழரசு, ஆதித்தமிழர் பேரவை மாவட்ட செய லாளர் கலைக்கண்ணன், திராவிட தமிழர் கட்சி பொதுச் செயலாளர் கதிரவன், கழக மாவட்ட மகளிரணி செயலாளர் பானுமதி, ப.க.மாவட்ட அமைப்பாளர் திருமாவளவன், தென்காசி மாவட்ட கழகத் தலைவர் வழக்குரைஞர் த.வீரன் உள்ளிட்ட தோழர்கள் கலந்து கொண்டனர்.
இந்த பரப்புரை பயணத்தில் திராவிடர் கழக பொதுச் செயலாளராக இரா.ஜெயக்குமார், மாநில அமைப்பாளர் இரா.குணசேகரன், பெரியார் வீர விளையாட்டுக்கழகமாநிலத் தலைவர் பேராசிரியர் ப.சுப்பிரமணியன், மாநில மாணவர் கழக செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், அமைப்புச் செயலாளர் வே.செல்வம், மாநில மாணவர் கழக அமைப் பாளர் இரா.செந்துராபாண்டி,மாநில இளைஞரணி துணை செயலாளர் ஆத்தூர் சுரேசு, தி.என்னாரெசு பிராட்லா உள் ளிட்ட தோழர்கள் பங்கேற்றனர்.
No comments:
Post a Comment