உலகின் மிகவும் வயதான நபர் 119 வயதில் ஜப்பானில் காலமானார் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, April 27, 2022

உலகின் மிகவும் வயதான நபர் 119 வயதில் ஜப்பானில் காலமானார்

டோக்கியோ, ஏப். 27- உலகின் மிகவும் வயதானவர் என்ற பெருமை பெற்ற ஜப்பானின் புகுவோகா நகரைச் சேர்ந்த மூதாட்டி யான கேன் தனகா கடந்த 19ஆம் தேதி தன்னுடைய 119ஆவது வயதில் கால மானதாக அரசு தகவல் வெளியிட்டுள்ளது.

1903ஆம் ஆண்டு ஜன வரி 2ஆம் தேதி பிறந்த கேன் தனாகா, கடந்த 2019ஆம் ஆண்டு மார்ச் மாதம் தன்னுடைய 116 ஆவது வயதில் மிகவும் வயதான நபர் என்ற கின்னஸ் சாதனை படைத் தார். 2020ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் அவர் 117 வயது மற்றும் 261 நாட்களை எட்டியபோது, ஜப்பானில் இதுவரை பதிவு செய்யப்பட்ட மிக வயதான நபராகவும் ஆனார். 

தனகா தன்னுடைய 19ஆவது வயதில் அரிசிக் கடை வைத்திருந்தவரை திருமணம் செய்து கொண் டார். சோடா மற்றும் சாக்லேட் உள்ளிட்ட ருசியான உணவுகளை உண்பதுடன் புதிய விஷ யங்களை கற்றுக்கொள் வது தன்னுடைய ஆயுளை அதிகரித்ததாக தனகா முன்பு குறிப்பிட்டிருந்தார்.

தனகா காலமானதை யடுத்து, பிரெஞ்சுப் பெண் மணியான லூசில் ராண் டன் இப்போது உலகின் மிக வயதான நபராக உள்ளார். அவரது வயது 118 ஆண்டு மற்றும் 73 நாட்கள் ஆகும். ஜப்பா னின் மிக வயதான நபர் இப்போது ஒசாகா மாகா ணத்தில் வசிக்கும் 115 வயதான ஃபுசா டாட்சுமி என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment