சென்னை, ஏப்.1 ஊரக மற்றும் நகர்ப்புற பகுதிகளில் உள்ள பள்ளிகளின் உள்கட்டமைப்பை மேம்படுத்த ரூ.112 கோடி நிதி ஒதுக்கி அரசாணை வெளியீடு செய்யப் பட்டுள்ளது.
ஊரக மற்றும் நகர்ப்புற பகுதிகளில் உள்ள ஆரம்ப மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை மேம் படுத்துவதற்கு ரூ.112 கோடியே ஒரு லட்சத்து 47 ஆயிரத்து 500 ஒதுக்கி, அதற்கான அரசாணையை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட் சித்துறை வெளியிட்டிருக்கிறது.
அந்த அரசாணையில் மேலும் கூறப்பட்டு இருப்பதாவது:-
பள்ளிகளில் ஆட்சியர் உள் கட்டமைப்பு வசதிகளான கழிவறை களை புனரமைப்பது, பழுது நீக்கம் செய்வது, பழுதடைந்த குடிநீர் வசதியை சரி செய்வது, பள்ளி கட்டடங்கள், சமையலறைகளை புனரமைப்பது போன்ற பணிகளை இந்த நிதியைக் கொண்டு மேற் கொள்ளலாம்.
இந்த பணிகளை மேற்கொள் வதற்கு வட்டார வளர்ச்சி அலுவலர், உதவி மற்றும் இளநிலை பொறி யாளர், பள்ளி தலைமை ஆசிரியர் அடங்கிய குழு ஒன்று அமைக்கப்பட வேண்டும்.
பள்ளிகளின் உள்கட்டமைப்பு மேம்பாட்டுப் பணிகளை மாவட்ட ஆட்சியர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர், செயற் பொறியாளர், உதவி இயக்குநர் நிலை அலுவலர்கள், உதவி செயற் பொறியாளர் சோதனை செய்து சரிபார்க்க வேண்டும்.
இந்த பணிகளுக்கான நிர்வாக அனுமதி மாவட்ட ஆட்சியரால் வழங்கப்படும். பழுது, புனர மைக்கப் பட வேண்டிய பள்ளிகளின் கட்ட டங்கள், சமையலறை கூடம், கழி வறை கட்டடங்கள் உள் மற்றும் வெளிப்புற தோற்றத்தில் பல்
வேறு வகையான ஒளிப்படங்கள் ஒப்புதலுக்கான மதிப்பீட்டில் இணைக்க ப்படாவிட்டால் நிர்வாக அனுமதி வழங்கக்கூடாது.
பள்ளிகளின் உள்கட்டமைப்பு மேம்பாட்டுப் பணிகள் குறித்து ஆரம்பம் முதல் நிறைவு வரை அனைத்து விரிவான ஆவணங்களை தயாரித்து அதை கல்வியியல் மேலாண்மை தகவல் மய்ய
(எமிஸ்) இணையதளத்தில் பதி வேற்றம் செய்ய வேண்டும் என்பது போன்ற பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகள் அதில் தெரிவிக் கப்பட்டு உள்ளன.
No comments:
Post a Comment