டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
தெலங்கானாவில் இருந்து நெல் கொள்முதல் செய்திட வலியுறுத்தி ஒன்றிய அரசுக்கு எதிராக ஏப்ரல் 11ஆம் தேதி டில்லியில் ஆர்ப்பாட்டம், முதலமைச்சர் சந்திர சேகர ராவ் அறிவிப்பு.
எதிர்க்கட்சிகளை இணைத்து இந்திய அளவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையேற்க வேண்டும், சி.பி.எம். தமிழ் மாநில தலைவர் கே.பால கிருஷ்ணன் பேட்டி.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
வரதட்சணையை ஊக்குவித்து டி.கே.இந்திராணி எழுதிய நூலை திரும்பப் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும், சிவசேனா எம்.பி. பிரியங்கா சதுர்வேதி, ஒன்றிய கல்வி அமைச்சருக்கு கடிதம்.
கார்ப்பரேட்டுகளிடம் இருந்து 2019-2020இல் ரூ.720 கோடி நன்கொடை பெற்றுள்ளதாக ஏ.டி.ஆர். அறிக்கை.
தி டெலிகிராப்:
அனைத்து பட்டப்படிப்பிலும் சேர பொது நுழைவுத் தேர்வை ஒன்றிய அரசு வலியுறுத்தியுள்ளதால், கோச்சிங் எனப்படும் தனிப்பயிற்சி மய்யங்களுக்கு மாணவர்களைச் சேர்க்க பெற்றோர் படையெடுப்பு.
கனடாவில் நடைபெறும் திரைப்பட விழாவில் ஆனந்த் பட்வர்த்தனின் படத்திற்கு விருது. இது போன்ற ஒரு விருது, சாதாரண காலங்களில், பன்னாட்டு அளவில் மட்டுமல்ல, இந்தியாவிலும் பார்வையாளர்களை அதிகரிக்கும். ஆனால், மக்கள் எதைப் பார்க்கிறார்கள், எதைப் பார்க்கக்கூடாது என்பதைக் கட்டுப்படுத்த அசாதாரண நடவடிக்கைகளை எடுக்கும் ஆட்சியின் கீழ் நாங்கள் வாழ்கிறோம் என பட்வர்த்தன் கருத்து.
- குடந்தை கருணா
No comments:
Post a Comment