போர்ச்சுகலின் மத்திய அட்லாண்டிக் அஸோர்ஸ் தீவுக் கூட்டம் பசு, எருமை, செம்மறி ஆடுகளின் சொர்க்க புரியாகத் திகழ்கிறது. அங்கு எப்போதுமே மாறாத பல ஆயிரம் கிலோ மீட்டர் பசுமை போர்த்திய புல்வெளியைக் காணலாம்.
திரும்பும் திசையெல்லாம் கால்நடைகளே மறையும் அளவிற்கு இயற்கையாகவே செழித்து வளர்ந்துள்ள புல்வெளிகளில் மேயும் கால்நடைகள் வற்றாது பால் வழங்கும். அவற்றிலிருந்து தயாரிக்கப்படும் பொருள்கள் பல குடும்பங் களை வாழவைக்கிறது. போர்ச்சுக்கலின் பொருளியலில் பால் உற்பத்திப் பொருள்களின் பங்களிப்பு சுமார் 80 விழுக் காடு. இம்மாதம் 19ஆம் தேதியிலிருந்து அங்கு 14,000க்கும் மேற்பட்ட நிலநடுக்கம் ஏற்பட்டதால் கால்நடைக ளுக்கும், வருமானத்துக்கும் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஒரு முறை நிலநடுக்கத்தின் அளவு 3.3 ரிக்டரைத் தொட்டது.
அது இன்னும் வலுவானால் எரிமலை குமுறுமோ என்று மக்கள் அஞ்சுகின்றனர். என்ன நடந்தாலும் பசுக் களைப் பராமரிப்பதே தங்களுக்கு மனநிறைவு தருவதாகக் கூறுகின்றனர் சிலர். ஆனால் 8,000க்கும் அதிகமானோர் தீவுக் கூட்டங்களிலிருந்து வெளியேறிவிட்டனர். பால் பொருள் தயாரிப்புக் கூடங்களில் ஊழியர் பற்றாக்குறை உள்ளது. நிலைமை மோசமானால் அவை மூடப்படலாம் என்று கூறுகின்றனர். வருமானம் குறைந்தால் மக்களின் வாழ்வாதாரம் மேலும் நசியும்; அரசாங்கம் உதவ வேண்டும் என்பது மக்களின் கோரிக்கை.
அவ்வப்போது நிலநடுக்க அதிர்வை உணரும் பசுக்கள் அச்சத்தில் மிரளுகின்றன.தேவைப்பட்டால் அவை பாது காப்பான இடங்களுக்கு மாற்றப்படும் என்கிறது அரசாங் கம். ஒட்டுமொத்த அய்ரோப்பாவின் இறைச்சித்தேவையை இந்த தீவு 60 விழுக்காடு நிறைவு செய்கிறது. இங்கிருந்து இறைச்சியை எடுத்துச்செல்ல சிறப்பு விமானங்கள் உள்ளூர் புறநகர் ரயில்கள் போல் செயல்படுகின்றன.
No comments:
Post a Comment