10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு வினாத்தாள் அனுப்பும் பணி தீவிரம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, April 27, 2022

10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு வினாத்தாள் அனுப்பும் பணி தீவிரம்

சென்னை, ஏப்.27- 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அடுத்த வாரம் தொடங்க உள்ள நிலையில், தேர்வுக்கான வினாத்தாள் அனுப்பும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டில் பிளஸ் 2 பொதுத் தேர்வு, மே 5 முதல் 28ஆம் தேதி வரையும், பிளஸ் 1 தேர்வு மே 10 முதல்31ஆம் தேதி வரையும், 10ஆம் வகுப்புக்கு மே 6 முதல் 30ஆம் தேதி வரையும் நடைபெற உள்ளன.

இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், தேர்வுப் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. மொத்தம் 3,936 தேர்வு மய்யங்கள் அமைக்கப் பட்டுள்ளன. பொதுத்தேர்வு மய்ய கண்காணிப்பாளர்கள், பறக்கும் படை அதிகாரிகள் மற்றும் மேற்பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டு, கட்டுக்காப்பு மய்யங்களுக்கு விடைத்தாள்கள் ஏற்கெனவே அனுப்பப்பட்டு விட்டன.

அதைத்தொடர்ந்து, மாநிலம் முழுவதும் உள்ள 300-க்கும் மேலான கட்டுக்காப்பு மய்யங்களுக்கு வினாத்தாள்கள் தற்போது பாதுகாப்பாக அனுப்பப்பட்டு வருகின்றன. அந்தந்த மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரிகள் மூலம் 800-க்கும் மேற்பட்ட வழித்தடங்கள் வாயிலாக இந்த பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஓரிரு நாட்களில் அனைத்து மையங்களுக்கும் வினாத்தாள்கள் சென்றடைந்துவிடும். இதையடுத்து வினாத்தாள் கட்டுக்காப்பு மய்யங்களுக்குத் தேவையான வசதிகளை மாவட்டக்கல்வி அதிகாரிகள் ஏற்படுத்தி, கண்காணிப்பைத் தீவிரப்படுத்தவும், காவலர் மற்றும் அலுவலக அதிகாரிகள் தினமும் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளதாக தேர்வுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


No comments:

Post a Comment