1 முதல் 9ஆம் வகுப்புகளுக்கு தேர்வு உண்டு பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, April 4, 2022

1 முதல் 9ஆம் வகுப்புகளுக்கு தேர்வு உண்டு பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

சென்னை, ஏப்.4 -தமிழ்நாட்டில் கரோனா தொற்றுக்கு பிறகு கடந்த செப்டம்பர், நவம்பர் மாதங்களில் படிப்படியாக பள்ளிகள் திறக்கப்பட்டன. கீழ் வகுப்புகள் முதல் பிளஸ் 2 வகுப்புகள் வரை அனைத்து வகுப்புகளும் தொய் வின்றி நடந்துவருகின்றன. இந் நிலையில், 10, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கான தேர்வுகள் மே மாதம் நடக்கும் என்றும் அதற்கான அட்டவணை களையும் பள்ளிக் கல்வித்துறை வெளி யிட்டுள்ளது. இந்நிலையில், 10, பிளஸ் 1, பிளஸ் 2  வகுப்புகளுக்கு  முதல் கட்ட திருப்புதல் தேர்வு நடந்து முடிந்த நிலையில் தற்போது இரண்டாம் கட்ட திருப்புதல் தேர்வு நடக்கிறது. இன்னும் இரண்டு நாட்களில் அந்த தேர்வுகளும் முடிந்துவிடும்.

இந்நிலையில், 6ஆம் வகுப்பு முதல் 9ஆம் வகுப்புகளில் படிக்கும் மாணவர் களுக்கும் மே மாதம் தேர்வுகள் நடக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற் கிடையே, 1 முதல் 5ஆம் வகுப்புகளுக்கு தேர்வு கிடையாது என்று செய்திகள் பரவியது. இது குறித்து பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலாளர் கூறும் போது, எந்த வகுப்புக்கும் தேர்வு ரத்து என்பது கிடையாது. அனைத்து வகுப்புக்கும் தேர்வு நடக்கும். குறிப்பாக 1 முதல் 5ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் தேர்வு உண்டு. தேர்வு ரத்து என்ற செய்தி தவறானது. மாணவர்களின் கற்றல் திறன் மற்றும் கற்றல் அடைவுத் திறனை சோதிக்க தேர்வு நடத்தப்படும் என்று தெரிவித்தார்.


No comments:

Post a Comment