டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
எதிர்க்கட்சிகளின் கூட்டணி அமைப்பது தொடர்பாக டி.ஆர்.எஸ். தலைவர் மற்றும் தெலுங்கானா முதலமைச்சர் கே.சந்திரசேகரராவ் டில்லியில் டில்லி முதலமைச்சர் அரவிந்த் கேஜ்ரிவால் சந்திக்கிறார். மேற்கு வங்க முதல மைச்சர் மம்தா, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோரையும் சந்திக்க முடிவு. உ.பி. தேர்தலில் சமாஜ் வாடி கட்சிக்கு ஆதரவாக வாரணாசியில் மம்தாவுடன் பொதுக்கூட்டத்திலும் பங்கேற்கிறார்.
டெக்கான் கிரானிக்கல், சென்னை:
இளைஞர்களின் திறமையை வளர்க்க "நான் முதல்வன்" திட்டம், தமிழ்நாடு முதலமைச்சர் துவக்கினார்,
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
டில்லியில் அமைந்துள்ள ரஷ்ய பாடகர் அலெக் சாண்டர் புஷ்கின் சிலை பீடத்தில் உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்யா வென்று அகண்ட ரஷ்யா அமைத்திட ஆதரவு தெரிவித்து ஹிந்து சேனா போஸ்டர் ஒட்டியது.
தி டெலிகிராப்:
உக்ரைனில் இந்திய மாணவர் ஒருவர் உயிரிழந்ததை யடுத்து, அரசாங்கம் மீதான தாக்குதலை காங்கிரஸ் தீவிரப்படுத்தியுள்ளது, மேலும் நரேந்திர மோடி தேர்தல் அரசியலில் மூழ்கிவிட்டதால், பிரதமர் பதவியில் இருந்து அவர் தனது பொறுப்பை துறந்துவிட்டதாகக் குற்றம் சாட்டியது.
- குடந்தை கருணா
No comments:
Post a Comment