மருத்துவம் படிக்க இந்திய மாணவர்கள் வெளிநாடுகளுக்குச் செல்லுவது ஏன்? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, March 3, 2022

மருத்துவம் படிக்க இந்திய மாணவர்கள் வெளிநாடுகளுக்குச் செல்லுவது ஏன்?

நீட்' தேர்வை ரத்து செய்து அதிக மருத்துவக் கல்லூரிகளை இந்தியாவில் உருவாக்குவதே ஒரே சரியான தீர்வு!

''தகுதி- திறமை''க்கும் - ‘நீட்'டுக்கும் சம்பந்தம் இல்லை!

மருத்துவம் படிக்க இந்தியாவிலிருந்து வெளிநாட்டுக்கு இந்திய மாணவர்கள் அதிகம் செல்லுவதற்குக் காரணம் என்ன என்பதைச் சிந்திக்கவேண்டும். ‘நீட்'டை ஒழித்து அதிக மருத்துவ கல்லூரிகளை இந்தியாவில் உருவாக் கினால் பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்கும்; தகுதி - திறமைக்கு அளவுகோல்நீட்' அல்ல என்பதை உணருங்கள் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.

அறிக்கை வருமாறு:

கருநாடக மாநிலத்திலிருந்து உக்ரைனுக்கு மருத் துவப் படிப்புப் படிக்கச் சென்ற மாணவர் நவீன் என்பவர், அங்கு நடக்கும் மூர்த்தண்ய போரினால், இடையில் சிக்கி மாண்டார் என்ற செய்தி வேதனை தரும் செய்தியாகும்.

'நீட்'பற்றி கருநாடக மாநில மேனாள் முதலமைச்சர் குமாரசாமி

இந்த மாணவரின் மரணத்திற்கு மூலகாரணத்தை, ‘நோய் நாடி நோய் முதல் நாடும்' வகையில் ஆராய்ந்து, கருநாடக மேனாள் முதலமைச்சர் H.D.குமாரசாமி அவர்கள் மிகுந்த சோகத்தோடு தெரிவித்துள்ள செய்தி, ‘நீட்' தேர்வுக்கு வக்காலத்து வாங்கும் பா...வினருக்கு கண் திறக்கக்கூடிய ஒன்றாகும். நமது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் அம்மாணவரின் குடும்பத்தாருக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

‘‘பொதுத் தேர்வில் 97 சதவிகிதம் மதிப்பெண் பெற்றும்நீட்' தேர்வில் வெற்றி பெற முடியாத காரணத்தால்தான், அம்மாணவர் நவீன் உக்ரைன் நாட்டு மருத்துவக் கல்லூரிக்குச் சென்று படிக்கவேண்டி வந்தது; அதனால் ஏற்பட்டதே இச்சாவு. இப்படிப்பட்டநீட்' தேர்வு என்ற கொடுமைக்கு விரைவில் தீர்வு காணப்படவேண்டும்'' என்று கூறியிருப்பதை எவரும் அலட்சியப்படுத்திவிட முடியாது; கூடாது.

நீட்' (Neet) என்பது அரசமைப்புச் சட்டத்தின்படி மாநில உரிமை; பல்கலைக் கழகங்களின் உரிமை - இவற்றைப் பறித்துக்கொண்டு, முற்றிலும் அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமான - ஒரு குறிப்பிட்ட தேர்வு அமைப்பை உருவாக்கி, தேர்வு நடத்த அனுமதிப்பதும், கல்வியும், சுகாதாரமும் மாநிலங்களின் ஒத்திசைவுப் பட்டியலில் (கன்கரண்ட் லிஸ்ட்) இருப்பதை அலட் சியப்படுத்திவிட்டு, உலக வர்த்தக ஒப்பந்தத்தினை இணைத்து, வெளிநாட்டுப் பிள்ளைகளும்கூட இந்நாட் டில்  அதிக பணம் கொடுத்துச் சேர்க்க இட ஒதுக்கீடு செய்வதும் முறையற்ற ஏற்பாடாகும்!

'நீட்' விலக்கு மசோதாவும்ஆளுநரின் போக்கும்!

சமூகநீதி மண்ணான தமிழ்நாடும், திராவிட இயக் கமும், அதனையொட்டி தமிழ்நாட்டில் பா...வை தவிர அத்துணை கட்சிகளும் தொடர்ந்து எதிர்த்து வரு கின்றனர். இந்த அடிப்படையில், மக்கள் வாக்களித்து தி.மு.. ஆட்சியை அமர வைத்தனர். அவ்வாட்சி, நீதிபதி .கே.இராஜன் தலைமையில் ஒரு நிபுணர் குழு அமைத்து, ‘நீட்' தேர்வின் சமூகநீதிக்கு எதிரான - அரசமைப்புச் சட்ட விதிகளுக்கு முரணான அம்சங் களையெல்லாம் அது ஆராய்ந்து, மக்கள் கருத்தும் கேட்டு, தந்த அறிக்கையின் அடிப்படையில், தமிழ்நாடு சட்டப்பேரவையில்நீட்' தேர்வுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று நிறைவேற்றிய மசோதாவைக் கூட - அரசமைப்புச் சட்ட விதிகளைப் புறந்தள்ளி மாநில ஆளுநர், இரண்டரை மாதங்கள் கிடப்பில் போட்டு, திருப்பி அனுப்பியதும், மீண்டும் அனைத்துக் கட்சிகள் கூடி முடிவு செய்து, அதனடிப்படையில், தமிழ்நாடு சட்டமன்றம் கூடி, இரண்டாவது முறை மசோதாவை நிறைவேற்றி அனுப்பியுள்ளது.

அரசமைப்புச் சட்டப்படி,  குடியரசுத் தலைவருக்கு அனுப்பவேண்டிய சட்டக் கடமையைச் செய்யாமல், தமிழ்நாடு ஆளுநர் காலந்தாழ்த்தி வருவது ஏற்கத்தக்கது அல்ல; மக்களின் வன்மையான கண்டனத்திற்கு ஆளாகும் ஒன்று.

நமது முதலமைச்சர்நீட்' தேர்வை ஒழிப்பதில் உறுதி யாக உள்ளார். நாடே அவரை உறுதியாக ஆதரிக்கிறது. (ஆந்திராவிலும் முன்பே குரல் எழும்பிவிட்டது).

கருநாடக மேனாள் முதலமைச்சரின் குரலையொட்டி, பாதிக்கப்படுவோர் குரல், ஓங்கும்! இறுதி வெற்றி சமூகநீதி போராளிகளுக்குத்தான்; காரணம், அர சமைப்புச் சட்டமும், நியாயமும் இவர்கள் பக்கமே!

இந்தியாவிலேயே மருத்துவம் படியுங்கள்' என்று கூறுகிறார் பிரதமர் மோடி. நல்ல யோசனைதான்!

பல வெளிநாடுகளுக்கு மருத்துவப் பட்டப் படிப்புக் குச் செல்வோர், அப்படிச் செல்லும் நிர்ப்பந்தம் அவர் களுக்கு ஏன் ஏற்பட்டது என்ற கேள்விக்குப் பிரதமரும், அவரது அமைச்சர்களும் சரியான விடை காண வேண்டும்.

மருத்துவம் படிக்க வெளிநாடு செல்லவேண்டிய அவசியம் ஏன்?

வெளிநாடுகளுக்கு அவர்கள் யாரும் விரும்பிச் செல்லவில்லை; 97 விழுக்காடு மதிப்பெண் வாங்கியும், ‘நீட்'  தேர்வினால் இடம் கிடைக்காதபோது, அவர்கள் அங்கேயாவது சென்று மருத்துவம் படித்து வர விழைகிறார்கள்!

அந்நாடுகளில் கட்டணமும் குறைவு; போக்குவரத்து மற்றும் தங்கிப் படிக்கும் செலவு உள்பட கணக் கிட்டாலும்கூடக் குறைவாக உள்ளது என்கிறார்கள்.

இந்த நேரத்தில்நீட்'  தேர்வுக்கு வாதாடுபவர்கள், அதற்குமுன் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் பெருந் தொகையை நன்கொடையாகவும், கட்டணமாகவும் பெற்றதுநீட்' மூலம் ஒழிக்கப்பட்டுவிட்டது என்று கூறுவது மேலெழுந்தவாரியாக நுனிப்புல் மேயும் போலி வாதமாகும். எப்படியெனில், அந்தத் தொகையை இப்போதுநீட்'  தேர்விற்குப் பின்பும் - அந்தத் தனியார் கல்லூரிகள் உயர்த்தப்பட்ட சம்பளக் கட்டணமாகவே - நிர்ணயித்து சட்டப்பூர்வமாகவே பெறுகின்ற நிலைதான் யதார்த்தமான உண்மையாகும்.

கருப்புப் பணம்வெள்ளைப் பணமானது!

முன்புநன்கொடையாக' (Capitation Fees) கருப்புப் பணமாக வாங்கிய தனியார் அமைப்புகள், அதை வெள்ளையாக்கிட பல உத்திகளை மேற்கொள்ளும் சிரமமே இல்லாமல், அதே தொகையை ‘‘வெள்ளை யாகவே'' பெறுவதை சட்டப்பூர்வமாகவே ஆக்கியது தான்நீட்'  தேர்வின்மூலம் நடைமுறை என்பதை எவரே மறுக்க முடியும்?

நீட்'  தேர்வில் ஆள் மாறாட்டம், கேள்வித் தாள் குளறுபடிகள், ‘கோச்சிங் கிளாஸ்' என்று மாணவர்கள் கொடுக்கும் பல லட்சம் ரூபாய் கார்ப்பரேட் பயிற்சிக் கொள்ளை - இவை ஆண்டுக்கு ஆண்டு மலிந்து  வந்து, வழக்குகள் நிலுவையில் உள்ளனவே!

'நீட்'டை நீக்கி, அதிக மருத்துவக் கல்லூரிகளை உருவாக்கிடுக!

எனவே, ‘நீட்'  தேர்வின்றி அந்தந்த மாநில அரசு களின்கீழ் மேலும் பல மருத்துவக் கல்லூரிகளை அமைத்திடுவது அவசர, அவசியமானதாகும். உலக விகிதாச்சாரம் அளவில் இந்தியா எங்கோ ஒரு பகுதி யில்தான் (மருத்துவர் -நோயாளி விகிதாசாரத்தில்) உள்ளது. மருத்துவக் கல்லூரிகளைப் பெருக்கிட்டால், ரஷ்யா, பிலிப்பைன்ஸ், சீனா மற்றும் உக்ரைன், எஸ் டோனியா போன்ற பல நாடுகளுக்கு நமது மாணவர்கள் செல்லவேண்டிய நிலையே இருக்காது!

இந்தியாவிலேயே படியுங்கள்' என்று சொல்வதோடு நிறுத்திக் கொள்ளாமல்நீட்'  தேர்வை ரத்து செய்து, அனைவருக்கும் வாய்ப்பை அளித்தால், மருத்துவர் களின் எண்ணிக்கை பல்கிப் பெருக வாய்ப்பு உண்டு.

'நீட்' - தகுதி, திறமை என்பது போலிவாதம்

நீட்'  தேர்வு தகுதி - திறமை அடிப்படையில் அமைந்துள்ளது என்பது போலிவாதம். அண்மையில் வந்த உச்சநீதிமன்றத் தீர்ப்பில் ஜஸ்டீஸ் D.Y.சந்திரசூட் தலைமை அமர்வில், இந்தத்தகுதி, திறமை' (Merit)  என்பதை, மிக நன்றாக விளக்கிய பிறகு, ‘நீட்'  தேர்வினால் நல்ல மருத்துவர்கள் கிடைப்பார்கள் என்ற வாதம் உடைந்துவிட்டது.

எனவே,  வெளிநாட்டிற்கு மாணவர்கள் செல்லாமல் தடுத்து, அந்த பொருளாதாரம் உள்நாட்டிலேயே புழங் கவும்நீட்'  தேர்வு ரத்து என்பது இன்றியமையாததாகும்.

இதில் வறட்டுப் பிடிவாதம் வேண்டாம்!

நம் மாணவர்களைக் காப்பாற்ற - நிரந்தர வழி அதன்மூலம் கிட்டும்!!

மருத்துவக் கட்டுமானமும் பெருக வழிவகை ஏற்படக் கூடும்.

கி.வீரமணி 

தலைவர்,

திராவிடர் கழகம்

சென்னை      

3.3.2022              

No comments:

Post a Comment