கவிஞர் கலி.பூங்குன்றன்
ஆண்டு அறுபத்தேழில்
ஆட்சியைப் பிடித்தார் அண்ணா!
அகவை அறுபத்தெட்டில்
ஆட்சியைப் பிடித்தார் ஸ்டாலின்
அண்ணாவுக்கு அன்று
தளபதி என்ற பெயரே!
இன்று இவரே தளபதி!
என்னே பொருத்தம்!
என்னே பொருத்தம்!!
பெரியாருக்கே காணிக்கை
எம் ஆட்சி என்றார் அண்ணா!
பெரியார் ஆட்சியே எமதென
பீடுற சொல்கிறார் நம் முதல்வர்
பெரியார் பிறந்த நாளை
சமூகநீதி நாளாக்கி
உறுதி மொழி எடுக்கச் செய்தார்
அரசு அலுவலர் அனைவரையும்!
நரிகள் கத்தட்டும் - அது
நாதசுரம் இவருக்கு!
ஆந்தைகள் அலறட்டும் - அது
ஆனந்த பைரவி இவருக்கு
எதிர்ப்பு முள்ளை
உரித்தால் தானே
பலாச் சுளை உள்ளே!
எட்டுத் திக்கு இருட்டையும்
எட்டி விரட்டும்
இந்த உதயசூரியன்!
அடுத்த அரை நூற்றாண்டும்
இவர் கையிருப்பில்!
அதிலென்ன அய்யம் - இது
திராவிட இயக்க மய்யம்!
வெல்லும் திராவிடப்
பேரியக்கத்தின் சொல்லுக்கான
பொருளதிகாரம்!
பெரியார் திடல் பாதையில்
பயணிக்கும் கைக்கடிகாரம்!
வாழ்க தளபதி
வையத்து நாட்களெல்லாம்!
No comments:
Post a Comment