உயர் நீதிமன்றம் உத்தரவு
சென்னை, மார்ச் 4- கோவில்களில் ஆடை கட்டுப்பாட்டுக்கான அறிவிப்புப் பலகை வைக்கவேண்டும் என உத்தரவிட முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில், சிறீரங் கத்தைச் சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில்,
“தமிழ்நாடு முழுவதும் உள்ள பல கோவில்களுக்கு பிற மதத்தை சேர்ந்தவர்கள் வந்து செல்கின்றனர். அவர்கள் முறையான ஆடை அணியாமல், லுங்கி போன்ற ஆடை களை அணிந்து வருகின்றனர். கோவிலின் 'புனித'த்தைக் காக்கும் வகையில் ஆடை கட்டுப்பாடுகளை விதித்து அனைத்து கோவில்களின் முன்பும் அது தொடர்பான அறிவிப்பு பலகை வைக்கவேண்டும் என்று இந்து சமய அறநிலையத்துறைக்கு உத்தரவிட வேண்டும். பிற மதங்களைச் சேர்ந்தவர்களை கோவிலில் அனுமதிக்க கூடாது என்றும் உத்தரவிட வேண்டும்” என கூறியிருந்தார்.
இந்த வழக்கிற்கு, இந்து சமய அறநிலைத் துறை பதிலளிக்க ஏற்கெனவே உயர்நீதி மன்றம் உத்தரவிட்டு இருந்தது. இந்த நிலையில் இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி, நீதிபதி டி.பரத சக்கரவர்த்தி ஆகியோர் முன்பு நேற்று (3.3.2022) மீண்டும் விசாரணைக்கு வந்தது.
இவ்வழக்கில் நீதிபதிகள், “ஒவ்வொரு கோவில்களிலும் ஒவ்வொருவிதமான ஆடை கட்டுப்பாடுகள் உள்ளன. எனவே, ஆடை கட்டுப்பாடு அமலில் உள்ள கோவி லில் மட்டும் இதுபோன்ற அறிவிப்பு பலகை கள் வைக்க வேண்டும். அதேநேரம், அனைத்து கோவில்களிலும் ஆடை கட் டுப்பாடு குறித்து அறிவிப்பு பலகை வைக்க வேண்டும் என்று பொதுவாக உத்தரவு பிறப்பிக்க முடியாது. பக்தர்கள் முறையாக ஆடை அணிந்து வரும் விதமாக, கோவில் நிர்வாகங்கள் தகுந்த நடவடிக்கை மேற் கொள்ள வேண்டும்” என்று உத்தரவிட்டனர்.
No comments:
Post a Comment