அய்.நா. சபையில் இருந்த உறுப்பினர்கள் ரசிய அமைச்சர் பேசத் தொடங்கியதும் கூண்டோடு வெளிநடப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, March 4, 2022

அய்.நா. சபையில் இருந்த உறுப்பினர்கள் ரசிய அமைச்சர் பேசத் தொடங்கியதும் கூண்டோடு வெளிநடப்பு

ஜெனீவா, மார்ச் 4- உக்ரைன் மீது 9-ஆவது நாளாக ரசியா தாக்குதல் நடத்தி வருகிறது. ரசிய தாக்குதலுக்கு உக் ரைன் படைகளும் பதிலடி கொடுத்து  வருகின்றன. இரு தரப்பு மோதலில் பலர் உயிரிழந்துள்ளனர். 

    இதற்கிடையில், உக்ரைன் மீது ரசியா நடத்தி வரும் தாக்குதலுக்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. மேலும், பல் வேறு நிறுவனங்கள், அமைப்புகள் ரசியாவுடனான தொடர்பை துண்டித்து வருகின்றன.

    இந்நிலையில், அய்.நா. சபையில் மனித உரிமைகள் ஆணையத்தின் சிறப்புக் கூட்டம் நடைபெற்றது. இதில், ரசியா சார்பில் அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் செர்கெ லவ்ரொவ் காணொலிக் காட்சி மூலம் பங்கேற்றார். ஏற்கெ னவே பதிவு செய்யப்பட்ட செகெ லவ்ரோவின் பேச்சு அடங்கிய காட்சிப் பதிவு அய்.நா. சபையில் ஒளிபரப்பப்பட்டது.

    அப்போது, உக்ரைன் மீதான ரசியாவின் தாக்குதலுக்கு கண்ட னம் தெரிவித்து கூட்டத்தில் பங் கேற்றிருந்த பெரும்பாலான நாடுக ளில் உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். இதனால் ரசிய வெளி யுறவுத்துறை அமைச்சரின் காணொலிக் காட்சிப் பதிவை காண யாரும் இல்லாமல் தனியாக ஒடிக் கொண்டிருந்தது. 100-க்கும் மேற் பட்ட தூதர்கள், உறுப்பினர்கள், அதிகாரிகள் ரசிய அமைச்சரின் காணாலிப் பேச்சை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர்.

No comments:

Post a Comment