சென்னை, மார்ச் 3 சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் எம்.ஜி.எம். மருத்துவமனையுடன் இணைந்து மெட்ரோ ரயில் பயணிகள் மற்றும் பொதுமக்களின் நலனுக்காக இலவச பொது சுகாதார மருத்துவ முகாமை சென்னையில் உள்ள மெட்ரோ ரயில் நிலையங்களில் நடத்துகிறது.
வருகிற மார்ச் மாதத்தில் 14 நாட்கள் இந்த மருத்துவ முகாம் நடத்தப்படுகிறது. காலை 8 மணி முதல் பகல் 11 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் இந்த முகாம் நடத்தப்படுகிறது.
வருகிற 5ஆம் தேதி ஆலந்தூரிலும், 7ஆம் தேதி சென்ட்ரல் மெட்ரோ நிலையத்திலும், 9ஆம் தேதி விம்கோ நகரிலும் முகாம் நடக்கிறது. 11ஆம் தேதி காலடிப் பேட்டையிலும், 15ஆம் தேதி புதுவண்ணை நகரிலும், 17ஆம் தேதி தண்டையார் பேட்டையிலும், 19ஆம் தேதி வண்ணை நகரிலும், 21ஆம் தேதி சென்ட்ரலிலும், 23ஆம் தேதி உயர்நீதிமன்ற மெட்ரோ நிலையத்திலும், 25ஆம் தேதி எல்அய்.சி. மெட்ரோ நிலையத்திலும், 29ஆம் தேதி ஆயிரம் விளக்கிலும், 31ஆம் தேதி ஏ.ஜி.பி.எம்.எஸ் மெட்ரோ நிலையத்திலும் முகாம் நடைபெற உள்ளது.
No comments:
Post a Comment