திருச்சி பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் தேசிய அறிவியல் நாள் கொண்டாட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, March 2, 2022

திருச்சி பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் தேசிய அறிவியல் நாள் கொண்டாட்டம்

திருச்சி, மார்ச் 2-- திருச்சி, பெரியார் நூற் றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 28.-2.-2022 அன்று காலை 10 மணியளவில் தேசிய அறிவியல் நாளை முன்னிட்டு மாவட்ட அளவில் பள்ளிக ளுக்கு இடையிலான திறன் சார்ந்த போட்டிகள்நிலையான எதிர்காலத் திற்கான அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்தில் ஒருங்கிணைந்த அணுகு முறைஎன்ற மய்யக் கருத்தில் சீரும் சிறப்புமாக நடைபெற்றது.

நிகழ்ச்சியைப் பள்ளி முதல்வர் டாக் டர். .வனிதா தொடங்கி வைத்து வந்திருந்தோரை வரவேற்று வரவேற் புரை வழங்கினார். இந்த நிகழ்வில் மாணவ, மாணவிகளுக்கு தமிழ் மற்றும் ஆங்கிலக் கட்டுரைப் போட்டிகள், வினாடிவினா, பல்வேறு அறிவியல் தொழிற்நுட்ப செய்முறைகள், பேச்சுப் போட்டிகள் நடைபெற்றன.

போட்டியில் திருச்சி மற்றும் வெட் டிக்காடு பெரியார் கல்விக் குழுமங் களின் மாணவர்களும் மற்றும் திருச்சி மற்றும் அதனைச் சுற்றியுள்ள 50க்கும் மேற்பட்ட பள்ளிகளிலிருந்து 500க்கும் அதிகமான மாணவ மாணவிகள் பெரும் திரளாகக் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.  போட்டிகளின் நடுவர் களாகப் பெரியார் மணியம்மை பெண் கள் மேல்நிலைப்பள்ளியின் அறிவியல் பாட ஆசிரியைகள் எஸ். கயல்விழி, அய்.நிர்மலா, எம்.இந்திராணி, பி.ஜெயச் சித்ரா ஆகியோர் கலந்து கொண்டு மாண வர்களின் திறமைகளை ஆராய்ந்து சிறப் பாகச் செயல்பட்ட மாணவர்களைப் பரி சுக்குரியோர்களாகத் தேர்வு செய்தனர்.

போட்டிகளில் பங்கேற்ற மாணவர் கள் சிறப்புப் பரிசுகளை அள்ளிச் சென்ற தோடு பங்கேற்ற அனைத்து மாணவர் களுக்கும் பாராட்டு;ச் சான்றிதழ்களும்; வழங்கிச் சிறப்பிக்கப்பட்டது.

நிகழ்வின் இறுதியாகப் பள்ளியின் அறிவியல் ஆசிரியை கே.சர்மிளா பானு நன்றியுரை வழங்க விழா இனிதே நிறைவுற்றது.

இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தேசிய அறிவியல் தினக் கொண்டாட் டத்தின் ஒருங்கிணைப்பாளர் பள்ளி யின்; வேதியியல் ஆசிரியை திருமதி என்.நிர்மலா மற்றும் இதர ஆசிரியர்கள் மிகச் சிறப்பான முறையில் ஏற்பாடு செய்திருந்தனர்

No comments:

Post a Comment