சென்னை, மார்ச் 4- வாகனங்கள் தயாரிப்பு நிறுவனமான ஸ்கோடா ஆட்டோ போக்ஸ்வாகன் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம் இயக்குநர் குழுவை வலுப்படுத்தும் நோக்கில் முக்கியமான தலைமைப் பொறுப்பு களில் புதிய நிர்வாகிகளை நியமித்து இந்திய வர்த்த கத்தின் எதிர்கால திட் டம் வளர்ச்சி வாய்ப்புக ளுக்கு வழியேற்படுத்தியுள் ளது.
கிறிஸ்டியன் ஷென்க், ஸ்கோடா ஆட்டோ நிறு வன நிதி மற்றும் தகவல் தொழில் நுட்பத்துக்கான இயக்குநர் குழு உறுப்பி னர், இப்போது எஸ்.ஏ.வி. டபிள்யூ.அய்.பி.எல்.-லின் (SAVWIPL) புதிய தலைவ ராக நியமிக்கப்பட்டுள் ளார். எஸ்.ஏ.வி.டபிள்யூ.அய்.பி.எல்.-லின் நிர்வாக இயக்குநர் பொறுப்பை பியுஷ் அரோரா ஏற்று உள்ளார். கான் வோன் சீலன், இயக்குநர் குழுவில் உயர் பொறுப்பாக எஸ்.ஏ. வி.டபிள்யூ.அய்.பி.எல்.-லின் விற்பனைமற்றும் சந்தைப் பிரிவின் செயல் இயக்குநராகப் பொறுப்பேற்றுள்ளார்.
புதிய நியமனங்கள் குறித்து ஸ்கோடா ஆட்டோ நிறுவன தலை மைச் செயல் அதிகாரி தாமஸ் ஷெபர் கூறுகை யில், “இந்திய ஆட்டோ மொபைல் துறையின் முன்னணி அய்ரோப்பிய பிராண்டாக பிரபலப் படுத்துவது நிறுவனத்தின் லட்சியமாகும். இந்த இலக்கை எட்ட இந்தியப் பிரிவின் தலைமைப் பொறுப்புக்கு முன்னணி தொழில்துறை வல்லுநர் கள் குழு இணைந்துள்ளதை மகிழ்வுடன் வரவேற்கிறேன் என தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment