உராய்வில்லாத மோட்டார்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, March 3, 2022

உராய்வில்லாத மோட்டார்!

    பின்லாந்திலுள்ள ஒரு புத்திளம் நிறுவனம், மோட்டார் உலகில் புரட்சியைத் துவங்கி வைத்திருக்கிறது. ஒரு உலோகத் தண்டில் உள்ள வட்டிற்கு, மின்காந்தப்புலத்தால் சுழற்சியை உண்டாக்கி, இயந்திர ஆற்றலை வெளிப்படுத்துகிறது மின் மோட்டார். இந்த சுழற்சியில் ஏற்படும் உராய்வினால் கணிசமான ஆற்றல் வீணாகிறது.

    இதனால், மோட்டாருக்கு தேய்மானம் ஏற்படுகிறது. மின் மோட்டார்களுக்கு பராமரிப்புச் செலவு அதிகமாக இருப்பதும் இதனால் தான்.இந்த சிக்கலை, மின் காந்த மிதவை சக்தியால் சுழலும் சக்கரம் முற்றிலும் தவிர்த்துவிடுகிறது. 'ஸ்பின் டிரைவ்' என்ற நிறுவனம் உருவாக்கியுள்ள 'ஆக்டிவ் மேக்னடிக் பியரிங்' (ஏ.எம்.பி.,) தொழில்நுட்பம்.. இது. மின்காந்தப் புலத்தால், மோட்டாரின் சுழலும் பியரிங் பகுதி மய்ய அச்சுப் பகுதி உலோகத் தண்டோடு உரசாமல் இருக்கும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால், ஸ்பின் டிரைவின் காந்த மோட்டார், மற்ற மோட்டார்களைவிட குறைவான மின் ஆற்றலை உள்வாங்கி, அதிகமான இயந்திரவியல் ஆற்றலை வெளிப்படுத்துகிறது. உராய்வு இல்லை என்பதாலேயே, ஸ்பின் டிரைவிற்கு பராமரிப்புச் செலவு மிகவும் குறையும்.


No comments:

Post a Comment