பார்ப்பனர்களைத் தெரிந்து கொள்வீர்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, March 2, 2022

பார்ப்பனர்களைத் தெரிந்து கொள்வீர்!

பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ்., பார்ப்பனர்கள் அதிகமிருப்பதால்
சென்னை-மேற்கு மாம்பலம் 134 ஆவது வார்டில் பா.ஜ.க. வெற்றிபெற்றது  
லிபர்ட்டி தமிழ் யூடியூப் தொலைக்காட்சி நடத்திய ஆய்வில் தகவல்

சென்னை, மார்ச் 2   சென்னை மாநகராட்சி, மேற்கு மாம்பலம்  134 ஆவது வார்டில் மட்டும் பா.ஜ.க. வெற்றி பெற்றது குறித்து லிபர்ட்டி தமிழ் என்னும் யூடியூப்  தொலைக் காட்சி  கருத்துக் கேட்பு நடத்தியது.  அதில் பங்கேற்ற சிலரின் கருத்துகள் வருமாறு:

நபர்1: ஆமாம், பெரிய வெற்றி தான்! யார் யாரோ பேசினார்கள், ஒரு சீட்டு வந்தால் கூட, நாங்கள் அரசியல் பேசுவதை விட்டு விடுகிறோம் என்றார்கள்; அவர்களை இப்பொழுது வெளியில் காண வில்லை. நாங்கள் வந்தது பெரிய அதிசயம்தான். பாரத் மாதா கீ ஜே!

*******

"கோட்சேவை நான் ஆதரிக்க மாட்டேன்"

ஈ.வெ.ராமசாமி நாயக்கர், பி.ஆர்.அம்பேத்கர், முகமது அலி ஜின்னா மூனு பேரையும் 

போட்டுத் தள்ளிட்டு, அவன் காந்தியைப் போட்டுத் தள்ளியிருந்தால், அவன் நிஜமான ஹிந்துவாதி

நபர் 2:  நான் அவர்களுக்காகப் பர்சனலாகப் பிரச்சாரம் செய்திருக்கிறேன். நான் ஆர்.எஸ்.   எஸிலும் சிறிய வயதில் இருந்திருக்கிறேன். இந்து மக்கள் கட்சியில் உறுப்பினர்; இந்து முன்னணியிலும் உறுப்பினர்; தாம் பிராஸ் அமைப்பிலும் உறுப்பினர்; வேர்ல்டு  பிராமின்ஸ் வெல்பேர்ஸ்  அசோசியே சனி லும்  உறுப்பினர்; ஈஷா யோகா விற்கும் இரண்டு முறை 600 கிலோ மீட்டர்  கூடுவாஞ்சேரியி லிருந்து வெள்ளியங்கிரி மலை அடிவாரம் வரை சென்றிருக்கி றேன்.

எதிர்க்கட்சியினரின் வார்த் தையில், எதிராளிகளுடைய வார்த்தையில் சொல்ல வேண் டும்  என்றால்,

நான் ஒரு  Hindu Terrorist   or  a Hindu Fundamentalist and I am  a  proud Hindu Terrorist

ஒரு ஹிந்து தீவிரவாதியாக மாறினான் என்றால், அவன் எல்லாவற்றையும் துறந்து துறவியாக, இமய மலையின் அடி வாரத்தில் தியானத்தில் அமர்வான். அதுதான் எங்களுடைய ஹிந்து மத சிறப்பு.

கேள்வி: நீங்கள் கோட்சே ஆதரவாளரா?

பதில்: கோட்சேவை நான் ஆதரிக்க மாட்டேன்; அவர் காந்தி என்ற ஒரு பசுவைக் கொன்றார். அதைத் தாண்டி அவன் என்ன செய்திருக்க வேண்டும் என்றால், நிஜமான ஒரு ஹிந்துவாக இருந்திருப் பானேயானால், அந்தக் காலத் தில் தனியாக திராவிடஸ்தான் கேட்ட  ஈ.வெ.ராமசாமி நாயக் கரைப் போட்டுத் தள்ளியிருக்க வேண்டும். அல்லது  தலித்திஸ் தான் கேட்ட பி.ஆர். அம்பேத் கரைப் போட்டுத் தள்ளியிருக்க வேண்டும்.

அல்லது  தனியாக பாகிஸ் தானையும், ஆப்கானிஸ் தானையும், பங்களா தேசத் தையும் பிரித்தானே முகம்மது அலி ஜின்னா - அவனுங்க மூனு பேரையும் போட்டுத் தள்ளிட்டு, அவன் காந்தியைப் போட்டுத் தள்ளியிருந்தால், அவன் நிஜமான ஹிந்துவாதி. ஆகவே,  கோட்சே மீது எனக்கு உடன் பாடு கிடையாது.

நான் சொல்றது உங்களுக்குப் புரிகிறதா?

அதுதான் என்னுடைய கருத்து.

கேள்வி: 200 வார்டுகள் சென்னையில் இருக்கின்றன - ஒரு இடத்தில்தான் பி.ஜே.பி. வெற்றி பெற்றிருக்கிறதே?

பார்ப்பான்: ஏனென்றால், பி.ஜே.பி.யை பிராமின் ஜனதா பார்ட்டி என்று பார்க்கிறார்கள். பார்ப்பனிய கட்சி என்று பார்க் கிறார்கள்; கடைசியில் உமா ஆனந்த் ஒருவர்தான் பார்ப்பனர்; அவருக்குப் பிரச்சாரம் செய்த நான் ஒருவன்தான் பார்ப்பான். மற்ற எவனும் பார்ப்பான் கிடை யாது.

எல்லா வருணத்தாரும், எல்லா ஜாதியினரும் உமா ஆனந்துக்குப் பிரச்சாரம் பண்ணினார்கள்.

நான், என்னுடைய  பாட்டன், முப் பாட்டன் எல்லோரும் கைபர் கண வாய் வழியே வந் தோம் என்றால், மீதி பேர் சவூதி அரேபியா விலிருந்து, ஆப் பிரிக்கா கண்டத்திலிருந்து வந்தவனுங்க.

புரியுறதா சொல்றது?

நாம் தமிழர் சீமானைப் பொறுத்த வரைக்கும் எல் லோருமே வந்தேறிங்க.

நான் அரசியல் எல்லாம் படித் தது கிடையாது. நான் அமெரிக் காவிற்குச் சென்று இரண்டு எம்.எஸ். படித்தேன். அவ்வளவு தான். அதைத்தாண்டி நமக்கு எந்த வொரு படிப்பறிவும் கிடையாது.

It Should be a decent Politics; It Should be a developmental Politics and not just Vote Politics of Caste based Politics

இதெல்லாம் என்றைக்கு மாறுமோ, அன்றைக்குத்தான் இந்தியா வல்லரசாக வரும்.

ஜெய் கீ - பாரத் மாதா கீ ஜெய் - வந்தே மாதரம்!

*******

நபர்3: இந்த வார்டில் பிரா மின்ஸ் ஓட்டு இருக்கிறது - அத னால் வெற்றி பெற்று விட்டார்கள். மற்ற இடங்களில் அவர்களை வந்து நிற்கச் சொல்லுங்கள்; சைதாப்பேட்டை பகுதி யில் நிற்கச் சொல்லுங்கள்; ஒரு ஓட்டு வாங்க மாட் டாங்க. டெபா சிட்டே வாங்க மாட்டாங்க. தமிழ் நாட்டிற்கு தேவையில் லாத கட்சி பி.ஜே.பி. அது கூடிய விரை வில் வெயிலில் கருகிவிடும்; சூரியன் ஒளிபட்டாலே கருகி விடும்.

*******

நபர் 4: தமிழ்நாட்டில் வரவே வராது; தாமரை மலராது என்று சொன்னதற்கு - தாமரை மலர்ந் திருக்கிறது என்பது பெரிய விஷயம்.

Sir, BJP and RSS alone is the Secular Organisations

இதை யாருமே புரிந்துகொள்ள மாட்டேன்   என்கிறார்கள்; சொல்லக் கூடாது எதுவும் - பச்சையாக சொன்னால், நிறைய பிராப்ளம் வருகிறது. 

மதவாத அரசியல் என்றால், அவர்கள் யாரையுமே இப்பொழுது வரை வெறுக்கவில்லையே!

வேலூர் இப்ராகிம் சார் இருக்காங்க.

*******

நபர் 5: பா.ஜ.க. ஜெயி த்திருக் கிறது என்று சொன்னால், பா.ஜ.க. உண்மையாக இருக்கி றார்கள்; பா.ஜ.க. வுக்கு வேண்டிய ஓட்டர்கள் இருக் கிறார்கள்.

மற்ற இடங்களில் பணம் விளை யாடி இருக்கிறது; இதை ஒளிபரப்பு வீங்களா? ஒளிபரப்ப மாட்டீங்க; ஒளிபரப்புங்க எனக்கொன்றும் பிரச்சினையில்லை.

கேள்வி: பா.ஜ.க. இங்கே வெற்றி பெற் றதும் பணம் கொடுத்துதான் என்றாகி விடாதா?

பதில்: அப்படியில்லை. பணம் கொடுப்பதற்கு அவர்களிடம் பணமும் கிடையாது - ஜெயிச்ச பொம்பளகிட்ட பணமும் கிடை யாது - இங்கே வாங்குகிறவர்களும் கிடையாது.

*******

நபர் 6 : வெரி ஹாப்பி. பி.ஜே.பி. தான் ஜெயிக்க வேண்டும்; பி.ஜே.பி. தான் வர வேண்டும். . Especially பிராமின்ஸ் கம்யூனிட்டி; பி.ஜே.பி. என்றால், ஹெல்ப் பண்றாங்க.

*******

நபர் 7: காலத்தினுடைய கட்டாயம்; இது வந்துதான் ஆக வேண்டும்; இப் பொழுது ஒரு புஷ்பம் வந்திருக்கிறது. அதனு டைய விதை கொஞ்சம் கொஞ்சமாக முளைக்கும். ஓவர் நைட்டில் மாற்றத்தை நாம் எதிர்பார்க்க முடியாது. சர்வேஜனா சுகினோ பவது. எல்லோரும் நல்லாயிருக்க ணும். மோடி நல்லாதான் பண் ணிட்டு வருகிறார்.

நீட் வேண்டாம் என்று சொல் லிக் கொண்டு தகராறு செய்து கொண்டிருக்கிறார்கள்; நம்ம பசங்க நீட் தேர்வில் பாஸ் பண் ணாமலா இருக்கிறார்கள்.

கேள்வி: உள்ளாட்சித் தேர் தலில் தி.மு.க. மாபெரும் வெற்றி பெற்றிருக்கிறது என்று சொல்கி றார்களே?

பதில்: நான் அதைப்பற்றியெல் லாம் நினைப்பதில்லை.

கேள்வி: எதைப்பற்றி?

பதில்: நீங்கள் ஏதோ சொன்னீர் களே, அதைப்பற்றி நினைப்ப தில்லை.

கேள்வி: தி.மு.க., அ.தி.மு.க. என்றுகூட சொல்லமாட்டீர்களா?

பதில்: நல்ல கட்சி வரவேண்டும்; Country   நல்லாயிருக்க வேண்டும்.

இவங்க வந்தாங்களா? அவங்க வந்தாங் களா? என்று சொன்னேன் என்றால், அவர் நாமம் போட்டிருந் தார், அதனால்தான் அவர் அப்படி சொல்கிறார் என்று சொல் வார்கள். அதெல்லாம் தேவையில்லை.

*******

நபர் 8: ஓட்டுப் போட்டது பா.ஜ.க. வுக்கு, அவ்வளவுதான்!

கேள்வி: வழக்கமாக நீங்கள் பா.ஜ.க. வுக்குத் தான் ஓட்டு போடுவீர்களா?

பதில்: ஆமாம்! கூட்டணி இருக்கும் பொழுது அ.தி.மு.க.விற்கு ஓட்டு போட் டோம்; இப்பொழுது பா.ஜ.க.விற்கு ஓட்டுப் போட்டி ருக்கோம். பா.ஜ.க. வளர்றது வெச்சிக்க வேண்டியதுதான். எங்களுக்கு மோடிதான் முக்கியம் - மோடியை எதிர்பார்த்துதான் நாங்கள் செயல்படுகிறோம்.

*******

நபர் 9: எல்லோரும் நல்லது செய்றாங்க; இருந்தாலும், அதில் முக்கியத்துவம் -பி.ஜே.பி. ஜெயித்து வந்ததற்குக் காரணம்,  அவர்களுடைய செல்வாக்கு - அவர்கள் நல்லது செய்யப் போகி றோம் என்று சொல்றாங்க.

*******

நபர் 10:  Hardcore BJP, Hardcore RSS நான் எப்படி சொல்ல முடியும்?

இங்கே நடப்பது எதுவும் பிடிக்க வில்லை; இந்த கவர்ன்மெண்ட் சரி கிடையாது - பிறகு என்ன சொல்ல வேண்டும் என்று நினைக்கிறீர்கள்.

*******

நபர் 11: இந்த வார்டில் நிறைய பிராமின்ஸ் இருப்பதினால் தான் பி.ஜே.பி. வெற்றி பெற்றிருக் கிறதே தவிர, அது பிளஸ் என்று சொல்ல முடியாது.

*******

நபர் 12 :  பிஜேபி என்பது ஹிந்துத்துவா  என்று நிறைய பேர் நினைத்துக் கொண்டி ருக்கி றார்கள். அது போன்று கிடையாது; சுத்த மான, ஒரு இந்தியாவை நேசிக்கக் கூடிய கட்சி என்றுதான் நான் பார்க்கிறேன்; இதைப்   பொதுவான கண்ணோட்டத்தோடு சொல்ல வில்லை; என் னுடைய கண்ணோட் டத்தில் அப் படித்தான் பார்க் கிறேன்.

*******

நபர் 13: இந்த வெற்றி என்பது ஆரம்பம்தான்; இன்னும் அடுத்த அடுத்த லெவலுக்குப் போக வேண்டும்.

கேள்வி: சென்னை மாநகராட்சி யில்  ஒரு இடத்தில்தான் பா.ஜ.க. வந்திருக்கிறதே, அதற்கு என்ன காரணம்?

பதில்: சிறுதுளி பெருவெள்ளம் என்பது போல, முதலில் இது ஒரு துளிதான்;  படிப் படியாக ஓசனாக மாறும்;  மாற வேண்டும்; அதனு டைய முதல் துளிதான் இந்த வெற்றி.

*******

நபர் 14: 200-இல் ஒன்று வெற்றி பெற்றிருந்தாலும், அது மிகவும் எபெக்ட் டிவ்வாக இருக் கும் என்று நான் நினைக்கிறேன். பி.ஜே.பி. தனியாக தேர்தலில் நின்று, ஒரு இடத்தில் வெற்றி பெற்றி ருக்கிறது. இதை பெரிய விஷய மாகத் தான் நாங்கள் பார்க்கிறோம்.

*******

நபர் 15: இந்த வார்டில் பெரும் பான்மையாக அவர்கள் தான். பிராமின்ஸ் தான் இருக்கிறார் கள்; ஆகவே, அவர்கள் வருவதற்கு சான்ஸ் இருக்கிறது.

*******

நபர் 16: பி.ஜே.பி. என் றால், எனக்குப் பிடிக்கும். ஆகவே, பா.ஜ.க.  வெற்றி பெற்றதில் எனக்கு சந் தோசம். நிறைய நல்லது செய்கிறார்கள்; கங்கை நதியை இணைக்கிறார்கள். இனிமேல் லைப் லாங் வாட்டர் பிராப்ளம் இருக்காது.

*******

நபர் 17: ரொம்ப சந் தோச மாக இருக்கிறது. இது ஒரு பெரிய புரட்சி. பி.ஜே.பி.யை எல்லோரும் தீண்டத் தகாத கட்சியாகப் பார்த் திருந்தார்கள்.

கேள்வி: சென்னையில் 200 வார்டு களில், ஒரு வார்டில் மட்டு மே வெற்றி பெற்றிருக்கிறதே, அது ஒரு பெரிய கொண்டாட்டமா?

பதில்: கொண்டாட்டம் தான். சந்தேக மில்லாத கொண் டாட்டம் தான். இவ்வளவு நாள் யாரெல்லாம் பேசினார்களோ, அவர் களுக் கெல்லாம் மரண அடி இது. இன்னும் இது  வளரவேண்டும். நான் பிஜேபி ஆளா பேசலை. நான் பக்கா அ.தி.மு.க.காரன்; இருந் தாலும், இந்த வெற்றியை நான் எதிர்பார்க்க வில்லை.

கேள்வி: ஜெயலலிதா இல்லாத அ.தி.மு.க.வை  நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்களா?

பதில்:  அது ரொம்பக் கஷ்டம். அந்த மாதிரி ஒரு ஆளுமை - தலைமை  இல்லை. அது போன்ற ஆளுமை வரவேண்டும்.

*******

நபர் 18:  எனக்குப் பிடிக் காத ஒரு கட்சி எது என்றால், பா.ஜ.க. தான்.

கேள்வி: ஏன் பிடிக்காது?

பதில்: அவர்களிடம் பாகுபாடு நிறைய இருக்கிறது. ஒன்றிய அரசுக்கும் - நமக்கும். ஏனென்றால், மாநிலத்தில் உள் ளவர்களை அவர்கள் வாழவிடுவ தில்லை.

கேள்வி: இந்த வார்டில் கவுன் சிலராக தாமரை மலர்ந்திருக் கிறதே?

பதில்: ஆமாம்; தாமரை மலர வில்லை; தெரியாமல், மொட்டைப் பிரித்துவிட்டு இருக்கிறார்கள்.

*******

நபர் 19: இந்த வார்டில் பி.ஜே.பி. வேட்பாளர்; வார்டு முழுவதும் பிராமின்ஸ் அதிகம். தயவு செய்து அரசியல்பற்றி என் னிடம் பேசாதீர்கள். ஏனென்றால், நான் ஒன்று சொல்வேன், நீங்கள் ஒன்று சொல்வீர்கள்; அதற்குப் பிறகு நான் டென்ஷன் ஆகி விடுவேன்.

*******

நபர் 20: நல்லது நடக்கப் போறது என்பது தீர்மானமாத் தெரியறது.

*******

நபர் 21: இது ஒரு தொடக்க மாக எடுத்துக்கொண்டு, எதிர் காலத்தில் வளருவதற்கு இதை அடித் தளமாக எடுத்துக் கொள்ளலாம்.



No comments:

Post a Comment