உக்ரைன் நாட்டில் சிக்கித் தவிக்கும் தமிழ்நாடு மாணவர்களை மீட்க சிறப்பு குழு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, March 4, 2022

உக்ரைன் நாட்டில் சிக்கித் தவிக்கும் தமிழ்நாடு மாணவர்களை மீட்க சிறப்பு குழு

சென்னை, மார்ச் 4 ரஷ்யாவின் தாக்குதலால் உக்ரைன் நாட்டில் சிக்கி தவிக்கும் தமிழ்நாடு மாணவர்களை மீட்க, சிறப்பு ஒருங்கிணைப்பு குழுவை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமைத்து இருக்கிறார். 

தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

அவசர கட்டுப்பாட்டு மய்யங்கள்

    உக்ரைன் நாட்டில் சிக்கி தவிக்கும் தமிழ்நாடு மாணவர்களை மீட்க மாநில, மாவட்ட அளவிலும், டில்லியிலும் தொடர்பு அலுவலர்கள் நியமிக்கப்பட் டுள்ளனர். அவசர கட்டுப்பாட்டு மய் யங்கள் தொடங்கப்பட்டுள்ளன. அவசர கட்டுப்பாட்டு மய்யங்களில் இதுவரை 3,025 தொலைபேசி அழைப்புகளும், 4,390 மின்னஞ்சல்களும் பெறப்பட் டுள்ளன.

    அதன்படி, தமிழ்நாட்டைச் சேர்ந்த 2,223 மாணவர்களின் விவரங்கள் தொகுக்கப்பட்டு, ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சகத்திற்கு அனுப்பி வைக் கப்பட்டு, அவர்களை மீட்டு தமிழ்நாடும் அழைத்து வர விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள கேட்டுக்கொள்ளப்பட் டுள்ளது.

    உக்ரைனில் இருந்து வரும் தமிழ்நாடு மாணவர்களை தொடர்பு கொண்டு அவர்களது பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

முதலமைச்சர் ஆலோசனை

    மீட்பு பணிகளை தமிழ்நாடு அரசுடன் ஒன்றிணைந்து விரைந்து மேற்கொள்ள ஏதுவாக, ஒன்றிய அரசின் சார்பாக ஒருங்கிணைப்பு அலுவலர் ஒருவரை நியமனம் செய்திட கேட்டுக்கொண்டதன் அடிப்படையில், ஒன்றிய அரசின் தொலைத்தொடர்பு அமைச்சக செய லாளர் கே.ராஜாராமன் ஒருங்கிணைப்பு அலுவலராக நியமனம் செய்யப்பட்டு, மீட்பு பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள் ளன.

    3ஆம் தேதி (நேற்று) காலை 6 மணி வரை 193 மாணவர்கள் தமிழ்நாடு திரும்பி உள்ளனர். இவர்கள் தமிழ்நாடு அரசின் செலவில் அவர்களது தங்களது சொந்த மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

    உக்ரைனில் சிக்கி தவிக்கும் தமிழ் நாட்டை சேர்ந்த எஞ்சியுள்ள மாணவர் களை உடனடியாக மீட்பது தொடர்பான ஆலோசனைக்கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமை செயலகத்தில் நேற்று(3.3.2022) நடந்தது.

    இந்த கூட்டத்தில் தலைமை செயலாளர் இறையன்பு, பொதுத்துறை செயலாளர் ஜெகநாதன், அயலக தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வு ஆணையர் ஜெசிந்தா லாசரஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ரஷ்யா வழியாக அழைத்து வர....

    கூட்ட முடிவில், உக்ரைனில் சிக்கித் தவிக்கும் எஞ்சியுள்ள தமிழ்நாடு மாண வர்களை மீட்க கீழ்கண்ட நடவடிக்கை களை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட் டுள்ளார்.

    அதாவது உக்ரைன் நாட்டின் கிழக்கு பகுதியில் அதிகமாக தமிழ்நாட்டு மாணவர்கள் தங்கியிருப்பதால், அவர் களை ரஷ்ய நாட்டின் எல்லை வழியாக அழைத்து வருவதற்கு ஒன்றிய அரசின் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் மூலம் தொடர்ந்து தொடர்பு கொண்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.

    தமிழ்நாட்டு மாணவர்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்து, அவர் களை மீட்க மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து அவர்களுக்கு தெரிவித்து, வழிநடத்தி அழைத்து வரவேண்டும்.

ஒருங்கிணைப்புக் குழு

    உக்ரைன் நாட்டின் அண்டை நாடு களான ஹங்கேரி, ருமேனியா, போலந்து மற்றும் சுலோவாகியா ஆகிய நாடுகளில் தற்காலிகமாக அடைக்கலம் புகுந்துள்ள தமிழ்நாட்டு மாணவர்களை உடனடியாக சிறப்பு விமானங்கள் மூலமாக தமிழ்நாட்டிற்கு அழைத்து வருவ

தற்கு உரிய ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும்.

    தமிழ்நாடு மாணவர்களை விரைந்து அழைத்து வருவதற்கு ஏதுவாக, மேற்படி நாடுகளுக்கு சென்று, அங்குள்ள இந்திய தூதரகங்களுடன் ஒருங்கிணைந்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள 

    தமிழ்நாட்டை சார்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா, கலாநிதி வீராசாமி, எம்.எம்.அப்துல்லா 

மற்றும்  சட்டமன்ற உறுப்பினர் டி.ஆர்.பி. ராஜா ஆகியோர் நியமிக்கப் பட்டுள் ளனர். 

    இவர்களுடன் 4 அய்.ஏ. எஸ். அதிகாரி களும் இணைந்து ஒருங்கிணைப்பு பணி களை மேற்கொள்வர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment