மாஸ்கோ, மார்ச் 4- உக்ரைன் மீது ரசியா நடத்தி வரும் தாக்குதலுக்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. மேலும், பல்வேறு நிறுவனங்கள், அமைப்புகள் ரசியா வுடனான தொடர்பை துண்டித்து வருகின்றன.
இந்நிலையில், உலகின் 2ஆவது பெரிய ஆயத்த ஆடை தயாரிப்பு மற்றும் விற்பனை நிறுவனமான ஹனீஸ் அண்ட் மயூரிஸ்ட் (பி&வி - எச் அண்ட் எம்) ரசியாவில் தனது விற்பனையை தற்காலிகமாக நிறுத் தியுள்ளது.
எச்அண்ட் எம் நிறுவனத்திற்கு ரசியாவில் 150 கடைகள் உள்ளன. அந்நிறுவனத்தின் மொத்த வருமா னத்தில் 4 சதவீகிதம் ரசியாவில் இருந்து வருகிறது. ரசியா எச் அண்ட் எம் நிறுவனத்தின் 6ஆவது மிகப்பெரிய சந்தையாகும்.
ரசியாவில் உள்ள எச் அண்ட் எம் ஆயத்த ஆடை விற்பனை கடை கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இணையம் மூலமான விற்பனையும் நிறுத்தப்பட்டுள்ளது. ரசியாவில் உள்ள எச் அண்ட் எம் நிறுவனத் தின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கமும் மூடப்பட்டுள்லது.
உக்ரைன் மீது போர் தொடுத்த தற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆப்பிள் நிறுவனம், கார் தயாரிப்பு நிறுவ னங்கள் என பல்வேறு நிறுவனங் கள் ரசியாவில் தங்கள் விற்பனையை நிறுத்தியுள்ள என்பது குறிப்பிடத் தக்கது.
No comments:
Post a Comment