கல்வி வேளாண்மை சுகாதாரத்திற்கான கூகுள் செயலி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, March 4, 2022

கல்வி வேளாண்மை சுகாதாரத்திற்கான கூகுள் செயலி

 சென்னை, மார்ச் 4- இந்தியாவின் அடுத்த தலைமுறை கண்டு பிடிப்பாளர்களுக்கு வளர்ச்சி வாய்ப்பை திறக்க உதவுவதை நோக்க மாக கொண்டு, மின்னணு வியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்ச கத்தின் (MeitY) முன்முயற் சியான MeitY ஸ்டார்ட் அப் ஹப் மற்றும் கூகுள் 100 இந்திய ஆரம்ப மற் றும் நடுத்தர ஸ்டார்ட் அப்களுக்கு உதவுவதை நோக்கமாக கொண்ட ஒரு குழுவை அறிவித்து உள்ளது. ஆப்ஸ் கேல் அகாடமியின் ஒரு பகுதி யாக உயர்தர உலகளா விய ஆப் மற்றும் கேம் களை உருவாக்க உதவும்.

    இந்நிகழ்ச்சியின் தொடக்க விழாவில் கூகுள் பிளே பார்ட்னர்ஷிப்ஸ் துணைத் தலைவர் பூர் ணிமா கோச்சிகர் பேசு கையில், “இன்று, இந்தியா முழுவதுமுள்ள இந்திய ஸ்டார்ட்அப்களுக்கு மிகப்பெரிய வாய்ப்புகளு டன், உலகளாவிய செயலி கண்டுபிடிப்புகளுக்கான முன்னணி மய்யமாக மாறுவதற்கு   தனித்துவ மாக  நிலை நிறுத்தப்பட் டுள்ளது. MeitY ஸ்டார்ட் அப்ஹப் உடனான கூட் டாண்மை மற்றும் அவர் களின் தொலை நோக்கு பார்வைக்கு நங்கள் இந்த தருணத்தில் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம் என அவர் தெரிவித்துள்ளார். 


No comments:

Post a Comment