புதுடில்லி, மார்ச் 2- ‘நீதிமன்றங் களில் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் இல்லா தது வேதனை அளிக்கி றது,’ என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா வருத்தத்துடன் தெரிவித் துள்ளார்.
அறிவுசார் சொத்து ரிமை தகராறு வழக்குகள் குறித்த கருத்தரங்கம் டில்லியில் நடைபெற்றது. இதில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா பேசியதாவது:
நாட்டில் நீதிமன்ற கட்டமைப்பை நன்கு பலப்படுத்த வேண்டும். இந்த விசயத்தில் குறைந்த பட்ச அடிப்படை வசதிகள் கூட இல்லை. தலைமை நீதிபதியாக நான் பொறுப் பேற்ற பிறகு, கட்ட மைப்பு வசதிகளை மேம் படுத்துவ தற்காக ஒரு கண்காணிப்பு அமைப்பை ஏற்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறேன். வெறும் நிதி ஒதுக் கீட்டினால் மட்டுமே உள்கட்ட மைப்பு வசதி பிரச்சினை களுக்கு தீர்வு காண முடியாது. சில மாநி லங்கள் இந்த நிதியை முழுமையாக பயன்படுத் துவது இல்லை. எனவே தான், நீதித்துறை கட்ட மைப்பை மேம் படுத்த, சிறப்பு நீதிமன்ற உள்கட்டமைப்பு ஆணை யத்தை உருவாக்க வேண் டும் என்று வலியுறுத்தி வருகிறேன். இதில், இது வரை எந்த முன்னேற்றமும் இல்லை. அறிவுசார் சொத் துரிமை தகராறு குறித்த வழக்குகளை விசாரிப்ப தற்கான அதிகார வரம்பை மீண்டும் உச்ச நீதிமன்றத் திடமே ஒப்படைக்க வேண் டும். நீதித் துறையில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்பவேண்டும். வழக்குகளை விரைவாக விசாரிக்க உயர் நீதிமன்ற நீதிபதிகள் எண்ணிக்கை யை அதிக ரிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment