கீவ், மார்ச் 4- உக்ரைன் மீது 9ஆவது நாளாக ரசியா தாக்குதல் நடத்தி வருகிறது. ரசிய தாக்குதலுக்கு உக்ரைன் படைகளும் பதிலடி கொடுத்து வருகின்றன. இரு தரப்பு மோதலில் பலர் உயிரிழந்துள்ளனர்.
இதற்கிடையில், மோதல் தீவிர மடைந்து வருவதால் உக்ரைனில் இருந்து பெண்கள், குழந்தைகள் உள்பட ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேறி வருகின்றனர்.
தலைநகர் கீவ்- நகரில் உள்ள ரயில் நிலையத்தில் இருந்து இயக் கப்படும் ரயில்களில் ஏறி ஆயிரக் கணக்கான மக்கள் அண்டை நாடு களுக்கு செல்லும் முயற்சியில் ஈடு பட்டு வருகின்றனர்.
இந்திய மாணவர்கள் உள்பட வெளிநாட்டு மாணவ, -மாணவி களும் ரயிலில் பயணித்து அண்டை நாடுகளுக்கு செல்லும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால், மீட்புப் பணிகள் நடைபெறும் கீவ் நகரின் தெற்கு ரயில்வே நிலையத்தில் அதிக அள விலான பொதுமக்கள் கூட்டம் நிரம்பியுள்ளது.
இந்நிலையில், மீட்புப் பணிகள் நடைபெறும் கீவ் தெற்கு ரயில் நிலையம் மீது ரசியா ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளதாக உக் ரைன் தெரிவித்துள்ளது.
ரயில் நிலையத்திற்கும் அதன் அருகே உள்ள இபிஸ் ஓட்டலுக்கும் இடையேயான பகுதியில் இந்த ஏவுகணை தாக்குதல் நடைபெற்று உள்ளது. ஏவுகணை தாக்குதலில் ரயில் நிலையத்தின் ஒரு பகுதி சேதமடைந்ததாக தகவல் வெளி யாகியுள்ளது.
இந்த ஏவுகணை தாக்குதலில் உயிரிழப்பு ஏதேனும் நிகழ்ந்துள் ளதா? என்பது குறித்த தகவல் தற்போது வரை வெளியாகவில்லை. மீட்புப் பணிகள் நடைபெற்று வரும் கீவ் ரயில் நிலையம் மீது ரசியா ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது.
No comments:
Post a Comment