கவி காமு ஷெரிப் அவர்களின் பேரனும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநிலச் செயலாள ருமான ஏ.வி.எம். ஷெரிப் ஆகிய எனது அன்பான வணக்கம்.
நடைபெற்று முடிந்த சென்னை மாநகராட்சி உள்ளாட் சித் தேர்தலில் 134-ஆவது வார்டில் பாரதீய ஜனதா கட்சி வெற்றி பெற்றதில் எனக்கு ஒரு விதத்தில் மகிழ்ச்சி.
நீங்கள் மாமன்ற உறுப்பினராகிவிட்டீர்கள். தலை நகரின் மாமன்றத்துக்குள் நீங்கள் அமரப் போகிறீர்கள். அந்த மாமன்றத்துக்குள் ஒரு தாழ்த்தப்பட்ட சமூகப் பெண் கம்பீரமாக மேயர் உடை அணிந்து நுழைவார் அவர் எங்கள் வீட்டு பெண். பல நூற்றாண்டுகளாக எந்தத் தெருவை சேரி என கூறி ஒதுக்கினீர்களோ அந்த தெருவில் இருந்து - எந்த மக்களை தீண்டத்தகாதவர்கள் என வஞ்சித்தீர்களோ அந்த மக்களில் ஒருத் தியாய் - எவரெல்லாம் உங்கள் வீதியில் நுழைய அனுமதி மறுத்தீர்களோ அந்த கூட்டத்தில் இருந்து - உங்கள் தெய் வங்கள் எனக்கூறி எவரெல்லாம் பார்க்கவே கூடாது என தடுத் தீர்களோ - அவரே எங்களில் ஒருத்தியாய் கம்பீரமாய் மேயர் உடை தாங்கி வரலாற்றுச் சிறப்புமிக்க சென்னை மாமன்றத்துக்குள் புவி அதிர நுழையப் போகிறார். அவர் வருகையின் போது எழுந்து நின்று நீங்கள் வணங்க வேண்டும் என்ற மரபே நினைக்க நினைக்க தித்திக்கிறது. இது வர்ணாச்சிரம வஞ்சம் தீர்த்தல் என்ற அத்தியாயத்தின் மிக முக்கியப் பகுதியாக வும் இருக்கக்கூடும். சமூக நீதியைக் கோட்பாடாக கொண்டு நீங்கள் மரியாதை செய்ய வேண்டும். சம தர்மத்தை கொள்கையாக கொண்ட எம் இனப் பெண்ணுக்கு சனாதன ஏற்றத் தாழ்வை தாங்கி பிடிக்கும் நீங்கள் எழுந்து நின்று வரவேற்க வேண்டும். காலச் சக்கரம் சுழல்கிறது.
வாழ்த்துக்கள் சகோதரி.
- ஏ.வி.எம். ஷெரீப்
மாநிலச் செயலாளர்,
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி
No comments:
Post a Comment