"ஸ்மார்ட் சிட்டி" திட்ட முறைகேடு புகார்: ஓய்வுபெற்ற அய்.ஏ.எஸ். அதிகாரி தலைமையில் விசாரணை ஆணையம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, March 3, 2022

"ஸ்மார்ட் சிட்டி" திட்ட முறைகேடு புகார்: ஓய்வுபெற்ற அய்.ஏ.எஸ். அதிகாரி தலைமையில் விசாரணை ஆணையம்

சென்னை, மார்ச் 3 தமிழ்நாட்டில் ஸ்மார்ட் சிட்டி திட்ட அமலாக் கத்தில் முறைகேடு நடந்ததா? என் பதை கண்டறிவதற்காக, ஓய்வுபெற்ற அய்.ஏ.எஸ். அதிகாரி டேவிதார் தலைமையில் விசாரணை ஆணை யம் அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. 

    ஒன்றிய அரசின் உதவியுடன் செயல்படுத்தப்படும் ஸ்மார்ட் சிட்டி என்ற திட்டம் 25.6.2015 அன்று தொடங்கப்பட்டது. 5 ஆண்டுகளில் இந்தியா முழுவதும் 100 நகரங்களை ஸ்மார்ட் சிட்டி என்ற சீர்மிகு நகரம் தகுதிக்கு உயர்த்துவது இந்த திட்டத்தின் நோக்கமாகும்.

    அதில் சென்னை, கோவை, மதுரை, தஞ்சாவூர், சேலம், வேலூர், திருப்பூர், தூத்துக்குடி, நெல்லை, திருச்சி, ஈரோடு ஆகிய 11 நகரங்கள் தமிழ்நாட்டில் இருந்து தேர்வு செய்யப்பட்டன. இதற்கு அரசு ஒப்புதல் அளித்து உத்தரவிட்டது.

    இந்த திட்டத்திற்கான செலவில் ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் 50 சதவீதம் செலவழிக்க வேண்டும். அந்த வகையில் தமிழ்நாட்டில் அந்த 11 திட்டங்களுக்கும் ஒன்றிய அரசு ரூ.5,390 கோடியையும், தமிழ் நாடு அரசு ரூ.4 ஆயிரம் கோடியையும் அனுமதித்து ஆணை பிறப்பித்தன.

    இந்த திட்டத்தின் கீழ் வரும், ரூ.10 ஆயிரத்து 651 கோடி மதிப்புள்ள 644 பணிகளில் ரூ.2,327 கோடி செலவில் 257 பணிகள் முடிக்கப்பட்டன. ரூ.7,947 மதிப்புள்ள 339 பணிகள் அமலாக்கத்தில் உள்ளன. ரூ.154 கோடி மதிப்புள்ள 10 பணிகள், டெண்டர் நடவடிக்கைகளில் உள் ளன. மேலும் சில பணிகளும் டெண் டர் நிலையிலும், விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பு நிலையிலும் உள்ளன.

    இந்த சூழ்நிலையில், சென் னையில் பல இடங்களில் மழைநீர் தேங்குவது குறித்து, கடந்த ஜனவரி 6ஆம்தேதியன்று சட்டசபையில் எம்.எல்.ஏ. ஒருவரின் கேள்விக்கு பதிலளித்த முதலமைச்சர், தியாக ராய நகர் பகுதியில் உள்ள மழைநீர் வடிகால்களை அடைத்து, பிளாட் பாரங்களை உயர்த்தி ஸ்மார்ட் சிட்டியை உருவாக்கிய காலத்தில் அதை கவனிக்காமல் விட்டதால், அங்கு தேங்கிய தண்ணீரை அப் புறப்படுத்த ஒரு வாரம் ஆகிவிட்டது.

    அதற்கு என்ன காரணம் என்று கேட்டீர்கள். அது நீங்கள் செய்த கோளாறு. எதைப்பற்றியும் கவலைப்படாமல் ஏதோ டெண்டர் விட்டோம், அதில் நிதி வந்தது, அதை வைத்து செலவு செய்தோம் என்றிருந்த நிலையில், அதற்கு என்ன கணக்கு என்று அறிய ஒரு விசாரணைக்குழு போடப்போகி றோம் என்று குறிப்பிட்டார்.

    அந்த அறிவிப்பை அரசு கவனமுடன் பரிசீலித்து, ஓய்வுபெற்ற அய்.ஏ.எஸ். அதிகாரி பி.டபுள்யூ.சி. டேவிதார் தலைமையில் ஒரு நபர் விசாரணை குழுவை அமைத்து அரசு உத்தரவிடுகிறது. தமிழ் நாட்டில் ஸ்மார்ட் சிட்டி திட் டத்தை அமல்படுத்தியது பற்றி இந்தக்குழு விசாரிக்கும்.

    இந்தக்குழு விசாரணை நடத்தி 3 மாதங்களுக்குள் அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். நகராட்சி நிர்வாக இயக்குனரகத்தில் இந்த விசாரணைக்குழுவின் அலு வலகம் இயங்கும்.

இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.


No comments:

Post a Comment