கோவை வெ.ராஜேஸ்வரி மறைவு: மகள்கள் உள்ளிட்ட பெண்கள் உடலைச் சுமந்து சென்றனர் - கழகத் தோழர்கள் மரியாதை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, March 2, 2022

கோவை வெ.ராஜேஸ்வரி மறைவு: மகள்கள் உள்ளிட்ட பெண்கள் உடலைச் சுமந்து சென்றனர் - கழகத் தோழர்கள் மரியாதை

போத்தனூர், மார்ச் 2- கோவை போத் தனூர் பகுதி கழகத் தோழர் வெங்கடேசனின் துணைவியா ரும், மாவட்ட மாணவர் கழகத் தலைவர் வெ.யாழினியின் தாயாருமான வெ.ராஜேஸ்வரி அவர்கள் உடல் நலக்குறைவு காரணமாக 24.2.2022 அன்று இரவு 8.30 மணி அளவில் மருத் துவமனையில் மறைவுற்றார். போத்தனூரிலுள்ள அவரது இல்லத்தில் நேற்று (25.2.2022) மதியம் 2 மணி அளவில் கழகத் தோழர்கள் மரியாதை செலுத் தினர். இறுதி ஊர்வலத்தில் உடலை மகள்கள் சுமந்து சென்றனர்

திராவிடர் கழகத் தோழ ருக்கு வீரவணக்கம், சமுநீதிப் போராளிக்கு வீரவணக்கம், ஜாதி ஒழிப்பு வீரருக்கு வீர வணக்கம், என்கிற ஒலிமுழக்கம் முழங்க மறைந்த ராஜேஸ்வரி அம்மையார் உடலை அவரது மகள்கள் வெ.யாழினி, வெ.இள மதி ஆகியோர் முன் வந்து சுமந்து வந்தனர். உடன் திரா விடர் கழக மகளிரணித் தோழி யர்களும் பங்கேற்றனர். அதே போல நஞ்சுண்டாபுரம் மின் மயானத்திலும் ஏராளமான திராவிடர் கழகத் தோழர்கள் வந்து உணர்ச்சி மிக்க ஒலி முழக்கமிட்டனர். பெண்களே உடலை தூக்கி வந்து இறுதி மரியாதை செலுத்தியதைக் கண்ட அவருடைய உறவினர் களும், அங்கு பணி புரியும் ஊழியர்களும் நெகிழ்ச்சிய டைந்தனர்.

மறைந்த ராஜேஸ்வரி அம் மையாருக்கு வெ.யாழினி,

வெ. இளமதி, மகன் வெ.தமிழ் செல்வன் ஆகிய மூவர் உள்ளனர்  மூவருமே பெரியாரியல் கொள்கை வழியில் கொள்கைக் குடும்பமா கவே பழகும் பண்புள்ளவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

கோவை மாவட்ட கழகம் சார்பில் மாவட்டத் தலைவர் .சந்திரசேகர், மாவட்ட செய லாளர் தி..செந்தில்நாதன், தருமபுரி மாவட்டச் செயலா ளர் யாழ்திலிபன், மண்டல செயலாளர் .சிற்றரசு மற்றும் மண்டல, மாவட்ட இளைஞ ரணி, மகளிரணி, மாணவர் கழக தோழர்கள் மற்றும் கழகப் பொறுப்பாளர்கள்,  தோழர்க ளுடன் திமுக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment