கரூர் மாவட்டம் சார்பில் மு.ஈட்டி கணேசன் 10 விடுதலை ஆண்டு சந்தாக்களுக்கான ரூ. 18,000 தொகையை, தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் அளித்தார். (பெரியார் திடல், 2.3.2022)
தமிழர் தலைவரிடம் நன்கொடை
முனைவர் த.ஜெபராமு கிருஷ்ணமூர்த்தி, தமிழ்த்துறையில் முனைவர் பட்டம் பெற்றதன் மகிழ்வாக, தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை சந்தித்து வாழ்த்துப் பெற்றதோடு விடுதலை வளர்ச்சி நிதிக்கு ரூ. 500/- கொடுத்தார். அவரது குடும்பத்தினர் உடனிருந்தனர். (பெரியார் திடல், 2.3.2022)
பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவன அரங்கில் டி.கே.எஸ். இளங்கோவன்
சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் கடந்த 16.2.2022 முதல் 6.3.2022வரை தென்னிந்திய பதிப்பாளர்கள், புத்தக விற்பனையாளர்கள் சங்கத்தின் 45ஆவது சென்னை புத்தகக்காட்சி நடைபெறுகிறது. பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் (எஃப்-38) அரங்கை தி.மு.க. மாநிலங் களவை உறுப்பினர் டி.கே.எஸ்.இளங்கோவன் பார்வையிட்டார். பெரியார் வலைக்காட்சி நேர்காணலில் அவர் கூறு கையில் "மனித சமூகத்தில் இழிவுகள் இருக்கின்ற வரையிலும் பெரியார் தேவைப்படுவார்" என்றார். (2.3.2022)
கொடுங்கையூர் ராஜேஷ்குமார், தனது இணையர் மாலா விற்கு ஆரியமாயை புத்தகத்தை வாங்கிக் கொடுத்திருக்கிறார். பெரியார் சிலை அருகில் இருவரும் ஒளிப்படம் எடுத்துக் கொண்டனர்.
No comments:
Post a Comment